Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சீனாவை தலைகீழாக புரட்டிப்போட்ட ரகசா புயல்.. 20 மில்லியன் மக்கள் பாதிப்பு!

Ragasa Cyclone Severely Damaged China | சீனாவில் உருவான ரகசா புயல் காரணமாக அங்கு பெரும்பாலான பகுதிகள் மிகுந்த சேதங்களை சந்தித்துள்ளன. இதன் காரணமாக சீனா முழுவதும் சுமார் 20 மில்லியன் பொதுமக்கள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

சீனாவை தலைகீழாக புரட்டிப்போட்ட ரகசா புயல்.. 20 மில்லியன் மக்கள் பாதிப்பு!
ரகசா புயல் பாதிப்பு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2025 08:06 AM IST

பீஜிங், செப்டம்பர் 26 : சீனாவை (China) தாக்கிய ரகசா புயல் (Ragasa Cyclone) காரணமாக அங்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்த ரகசா புயல் காரணமாக சீனாவில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிகக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிப்பு, விமான ரத்து, இயல்பு வாழ்க்கை முடக்கம் என பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், சீனாவை தலைகீழாக புரட்டிப்போட்ட ரகசா புயல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவை தலைகீழாக புரட்டிப்போட்ட ரகசா புயல்

தெற்கு சீனக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவின் தைவான் பகுதியை சூரையாடிய இந்த புயல், குவாங்டாங் மாகாணத்தையும் மிக கடுமையாக தாக்கியது. புயல் தாக்கத்தின் போது மணிக்கு சுமார் 265 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில், குவாங்டாங் மாகாணத்தில் வசித்து வந்த சுமார் 20 மில்லியன் ( 200 லட்சம்) பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தெஹ்ரிக் – இ தலிபான் பாகிஸ்தான் மீது வான்வழி தாக்குதல்.. 30 பேர் உயிரிழப்பு..

சேவைகள் ரத்து – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ரகசா புயல் காரணமாக சீனாவில் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அங்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக அங்கு 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக அங்கு நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. பல பகுதிகளில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு.. தைவான் அரசு அதிரடி அறிவிப்பு!

இதன் காரணமாக சுமார் 5 லட்சம் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக இருளில் தவித்து வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.