குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு.. தைவான் அரசு அதிரடி அறிவிப்பு!
Taiwan Government Payout to Increase Child Birth | சீனாவின் உறுப்பு நாடான தைவானில் மக்கள் தொகை எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டு அரசு குழந்தை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தைபே நகரம், செப்டம்பர் 22 : தைவானில் (Taiwan) குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் (China) உறுப்பு நாடான தைவானில் மக்கள் தொகை (Population) மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்கனவே இத்தகைய நடைமுறை உள்ள நிலையில், தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் பரிசுத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து தைவான் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 3 லட்சம் – பரிசுத்தொகை உயர்வு
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949 ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்துவிட்டது. ஆனால், தைவானை சீனா தனது பகுதியாகவே கருதி வருகிறது. அதன் காரணமாக தைவானை எப்படியாவது தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சீனா செயல்பட்டு வருகிறது. ஆனால், தைவான் தன்னை ஒரு தனி நாடாக முன்னேற்றம் செய்வதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு நாடு வலுவடைய அதன் மக்கள் தொகை முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், தைவானில் மக்கள் தொகை மிக குறைந்த அளவில் உள்ளது.
இதையும் படிங்க : ஏலியன் வருகை முதல் 3ஆம் உலக் போர் வரை.. 2026-ல் இதெல்லாம் நடக்கும்.. பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்!




மக்கள் தொகையை உயர்த்த அதிரடி நடவடிக்கை
தைவானில் 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை வெறும் 2.50 கோடியாக மட்டுமே இருந்தது. இது மிக குறைவான மக்கள் தொகையாக உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க அந்த நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது ஒரு குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு 3320 தைவான் டாலர்கள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு குழந்தைக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யாவை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு!
முன்னதாக ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. மக்கள் தொகையை உயர்த்தும் ஒரே நோக்கத்துடன் தற்போது இரண்டு மடங்காக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.