Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஷ்யாவை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு!

7.5 Magnitude Earthquake Strikes Russia | ரஷ்யாவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மிக கடுமையானதாக உள்ள நிலையில், அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Sep 2025 10:20 AM IST

கம்சாட்கா, செப்டம்பர் 19 : ரஷ்யாவின் (Russia) கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா (Kamchataka) தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 (7.5 Magnitute Earthquake) ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது மிக கடுமையான நிலநடுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள இந்த மிக கடுமையான நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரஷ்யாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கும் பகுதியில் கம்சாட்கா தீபகற்பம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று (செப்டம்பர் 19, 2025) நள்ளிரவு அதாவது இந்திய நேரப்படி அதிகாலை 12.28 மணி அளவில் சக்தியவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு 5-க்கு மேல் தாண்டினாலே கடுமையான நிலநடுக்கம் என கூறப்படும் நிலையில், இது மிக கடுமையான நிலநடுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : North Korea : இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது.. வடகொரியாவில் கிம் ஜாங் உன் புதிய உத்தரவு!

7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவை தாக்கிய நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் 85 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 12.28-க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த 10 நிமிட இடைவெளியில் அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நள்ளிரவு 12.38 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாய் என திட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட பெண் ஊழியர்.. நிறுவனத்துக்கு ரூ.90 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!

சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

அந்த பகுதியில் தொடர்ந்து அடுத்து அடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.