North Korea : இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தவே கூடாது.. வடகொரியாவில் கிம் ஜாங் உன் புதிய உத்தரவு!
North Korea's New Speech Restrictions | வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு மிக கடுமையான விதிகள் வழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், சில மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை வடகொரியாவில் பயன்படுத்த கூடாது என கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

பியாங்காங், செப்டம்பர் 17 : வடகொரியாவில் (North Korea) ஏற்கனவே பல வித்தியாசமான மற்றும் கடுமையான விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதாவது சில வார்த்தைகளை வடகொரியா மக்கள் பயன்படுத்த அவர் தடை விதித்துள்ளார். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மிக கடுமையான விதிகளை பின்பற்றும் அந்த நாட்டு மக்களுக்கு இது மேலும் சவாலாக அமைந்துள்ளது.
வடகொரியாவில் அமலுக்கு வந்த புதிய விதி
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான எந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக வடகொரியா மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும், எந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை அவர் வரையறுத்து வைத்துள்ளார். அதன்படி தான் அந்த நாட்டு மக்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் எல்லையில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு




புதிய விதியை அறிமுகம் செய்த கிம் ஜாங் உன்
வடகொரியாவில் ஏற்கனவே மிக கடுமையான விதிகள் கடைபிடிக்கப்படும் நிலையில், கிம் ஜாங் உன் தற்போது மேலும் ஒரு புதிய விதியை அறிமுகம் செய்துள்ளார். அதாவது மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தக்கூடிய சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று வடகொரியாவில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கு ஏற்கனவே கடுமையாக உள்ள விதிகளில் இந்த விதியும் இணைந்துள்ளது பொதுமக்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய லாரி எலிசன்.. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்!
என்ன என்ன வார்த்தைகளை பயன்படுத்த கூடாது?
கிம் ஜாங் உன் உத்தரவின் படி, வடகொரியாவில் ஹம்பர்கள், ஐஸ்கிரீம், கரோக்கி உள்ளிட்ட சொற்களை பயன்படுத்த கூடாது. அதன்படி, வடகொரியாவில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகல் இந்த ஆங்கில சொற்களை பயன்படுத்த கூடாது என்று அதற்கு இணையான வேறு வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வடகொரியாவில் சிறிய விதிகளை மீறினாலே மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் நிலையில், கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ள இந்த புதிய விதி பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.