Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’ இந்தியா அமெரிக்க உறவில் கிரீன் சிக்னல்.. ரத்தாகுமா வரி?

America Tariffs : இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி தொடர்பாக, அமெரிக்க இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவேன் என டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான வரி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’ இந்தியா அமெரிக்க உறவில் கிரீன் சிக்னல்.. ரத்தாகுமா வரி?
பிரதமர் மோடி - டிரம்ப்Image Source: TV9
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Sep 2025 08:28 AM IST

டெல்லி, செப்டம்பர் 10 : அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் (India America) இடையிலான வர்த்தக தடைகளை (US Tariffs) நீக்குவது குறித்து பிரதமர் மோடியுடன் (PM Modi) பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், வர்த்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் மூலம் விரைவில் இந்தியா பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, உலக நாடுகளுக்கு மீது அளவுக்கு அதிகமான வரிகளை விதித்து வருகிறது. குறிப்பாக, நம் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார். முதலில் 25 சதவீத வரியை விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமாக மேலும் 25 சதவீத வரியை விதித்தார்.

இந்த இருவரிகளும் 2025 ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது. அமெரிக்காவின் வரியால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, திருப்பூர், கோவை விசாகப்பட்டினம் போன்ற தொழில்நரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், இந்தியா அமெரிக்க இடையே வர்த்த மோதலும் நீடித்து வருகிறது. அமெரிக்கா இந்தியா உறவில் விரிசலும் ஏற்பட்டது. இதனிடையே, அமெரிக்கா இந்தியா இடையேயான உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

Also Read : அமெரிக்க – இந்தியா உறவு.. டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி… நெகிழ்ச்சி பதிவு

‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’


அதாவது, கடந்த வாரம் பிரதமர் மோடியை டிரம்ப் தனது நண்பர் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.  இதற்கு பிரதமர் மோடியும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார். இதன் மூலம், இருநாட்டு உறவில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக தடைகளை நீக்குவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Also Read : டிரம்புடன் பிரச்னை… திடீரென அமெரிக்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் ஒரு பதிவில், ”இந்தியாவும் அமெரிக்காவும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் வாரங்களில் எனது மிக நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்காளிகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த விவாதங்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஜனாதிபதி டிரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  இருநாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.