Gold Price : இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
Gold and Silver Price Reduced In Chennai | தங்கம் விலை நேற்று (பிப்ரவரி 12, 2026) குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 13, 2026) இரண்டாவது நாளாக மீண்டும் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 13 : சென்னையில் நேற்று (பிப்ரவரி 12, 2026) தங்கம் விலை (Gold Price) அதிரடியாக குறைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 13, 2026) இரண்டாவது நாளாக தங்கம் மீண்டும் குறைந்துள்ளது. அதாவது, இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.200 மற்றும் வெள்ளி (Silver) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ள தங்கம்
2026, ஜனவரி மாதத்தை விடவும் பிப்ரவரி மாதத்தில் தங்கம் சீரான விலையை கொண்டுள்ளது. ஜனவரியின் தங்கம் கடும் உச்சத்தில் இருந்த நிலையில், அது அப்படியே படிப்படியாக குறைந்து பிப்ரவரியில் சீரான நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.190 குறைந்தும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்தும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி அதிரடியாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க : ஆதார் கார்டு மூலம் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.. அட இந்த திட்டம் குறித்து உங்களுக்கு தெரியாதா?




கடந்த 10 நாட்களுக்கான தங்கம், வெள்ளி நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 04 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 05 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 06 பிப்ரவரி 2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 |
| 07 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 08 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 09 பிப்ரவரி 2026 | ரூ.14,650 | ரூ.1,17,200 |
| 10 பிப்ரவரி 2026 | ரூ.14,580 | ரூ.1,16,640 |
| 11 பிப்ரவரி 2026 | ரூ.14,790 | ரூ.1,18,320 |
| 12 பிப்ரவரி 2026 | ரூ.14,600 | ரூ.1,16,800 |
| 13 பிப்ரவரி 2026 | ரூ.14,400 | ரூ.1,15,200 |
இதையும் படிங்க : MIS : மாதம் ரூ.9,000 வட்டி மட்டும் கிடைக்கும்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,400-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.