AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FD : எஃப்டி திட்டங்களுக்கு 7.05% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Highest Interest Rates For Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பிப்ரவரி 2026-ல் எஃப்டி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

FD : எஃப்டி திட்டங்களுக்கு 7.05% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Feb 2026 21:24 PM IST

நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்றால் சேமிப்பு (Savings) அல்லது முதலீடு (Investment) கட்டாயமாக உள்ளது. இதற்காக பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் ஒரு அட்டகாசமான திட்டம் தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை பெற முடியும். இந்தியாவின் பல்வேறு முன்னணி வங்கிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது எந்த எந்த வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு எவ்வளவு வட்டி தருகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எஃப்டி திட்டங்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank Of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தின் அடிப்படையில் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், பிப்ரவரி 06, 2026 அன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாகவே தொடரும் என கூறியுள்ளார். இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு? ஊழியர்கள் அதிர்ச்சி!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI – State Bank Of India) தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 3.05 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.55 சதவீதம் முதல் 7.05 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.

எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 2.75 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.25 சதவீதம் முதல் 6.95 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Repo Rate : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு!

யெஸ் பேங்

யெஸ் பேங் (Yes Bank) தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 3.25 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.75 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.

Follow Us