AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Repo Rate : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு!

Repo Rate Remain Unchanged | 2025 முதல் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. இந்த நிலையில் மூன்று நாட்கள் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ கவர்கனர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Repo Rate : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Feb 2026 12:19 PM IST

புதுடெல்லி, பிப்ரவரி 06 : 2025 ஆம் ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை பலமுறை குறைத்துள்ளது. இதன் காரணமாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.25 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 5.25 சதவீதமாகவே நீடிக்கும் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறித்து சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

6.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைகப்பட்டுள்ள ரெப்போ வட்டி

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி குறையும். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை என்றால் இந்த வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும். ஒவ்வொரு  முறையும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும்போது, அந்த கூட்டத்தின் மூன்றாவது நாளில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகும். அதேபோல இன்று (பிப்ரவரி 06, 2026) இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தின் மூன்றாவது நாள் நிறைவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்து வருவதற்கான விதிகளில் மாற்றம்.. பிப்ரவரி 2 முதல் அமல்!

ரெப்பொ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ஆர்பிஐ கவர்னர்

இந்த நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாகவே நீடிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மூன்று நாட்கள் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு சஞ்சய் மல்ஹோத்ரா இதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us