AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு? ஊழியர்கள் அதிர்ச்சி!

Provident Fund Interest Rates: இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 8 முதல் 8.20 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 05 Feb 2026 13:40 PM IST
இந்தியாவில்  அரசு மற்றும் தனியார் துறைகளில்  பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கான  வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்  குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  வருங்கால வைப்பு நிதியின் 239-  ஆவது  மத்திய அறங்காவலர் குழு  கூட்டம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்  2025-26  ஆண்டுக்கான  வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அறிவிக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் நலன் சாரந்த முக்கிய முடிவுகள் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 / 5
இதற்கான மத்திய அறங்காவலர் குழு கூட்டம்  வருகிற மார்ச்  மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருப்பதாகவும்  கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில்  தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி  வட்டி விகிதம்  குறைக்கப்பட்டு 8  முதல் 8.20  சதவீதம் வரை  நிர்ணயிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த 2024-2025  ஆம் ஆண்டுக்கான நிதியின் ஸ்திரத்தன்மையை  உறுதி செய்வதற்காக வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25  சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2 / 5
பிரதமரின்  விக்ஸித்  பாரத் ரோஸ்கர்  யோஜனாவின் கீழ்,  அதிக அளவிலான மக்கள்  வருங்கால வாய்ப்பு நிதியில் சேர வாய்ப்புள்ளதால்  குறைந்தபட்ச இடையகத்தை  பராமரிக்கும் அதே நேரத்தில்  வருங்கால வைப்பு நிதியின் அதிக பணத்தை செலுத்துவதை உறுதி செய்வதற்காக வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மத்திய அறங்காவலர் குழு  ஒப்புதல் அளித்த பிறகு  நிதி அமைச்சகத்தால்  வட்டி விகிதம்  அதிகரிக்கப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, தற்போது, மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடத்தப்பட்டு வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளது

3 / 5
இந்தத் திட்டம்  தற்போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்படும்.  இந்த அறிவிப்பை தொடர்ந்து  வருங்கால வைப்பு நிதி பற்றி தொகை சந்தாதாரர்களின்  கணக்குகளில் வரவு வைக்கப்படும். 2025- 2026 நிகழ் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை  முடிவு செய்ய  வருங்கால வைப்பு நிதியின்  எஃப். ஐ. ஏ. சி.  கூட்டம்  இந்த மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

4 / 5
தற்போது உள்ள முதலீடுகளில்  இருந்து கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் இந்த முடிவு  எடுக்கப்படும் என்று  மத்திய அறங்காவலர் குழுவுக்கு  பரிசீலனை  செய்யப்படும். சமூக பாதுகாப்பை  விரிவு படுத்துவதற்காக  வருங்கால வைப்பு நிதியின் கீழ்  ஊதிய உச்ச வரம்பை மாதத்துக்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25  ஆயிரமாக உயர்த்துவது குறித்தும்  இந்த வாரியம் ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைத்து அறவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

5 / 5
Follow Us