Gold Price : ஒரே நாளில் ரூ.1,500 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!
Gold Price Reduced And Silver Price Remain Same | சென்னையில் நேற்று (பிப்ரவரி 11, 2026) தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2026) தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 12 : சென்னையில் நேற்று (பிப்ரவரி 11, 2026) தங்கம் விலை (Gold Price) உயர்ந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2026) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உச்சத்திற்கு பிறகு சீராக இருக்கும் தங்கம் விலை
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஜாக்பாட் ஆண்டாக அமைந்தது. காரணம், 2026 தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை ஏற தொடங்கியது. அதன்படி, ஜனவரி 29, 2026 அன்று தங்கம் புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.16,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் தங்கம் சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் உருவானது.
ஆனால், ஜனவரி 30, 2026 முதல் தங்கம் மற்றும் வெள்ளியில் நிலை தலைகீழாக மாற தொடங்கியது. அதாவது ஜனவரி 30, 2026 தங்கம் மற்றும் வெள்ளி படிப்படியாக விலை குறைய தொடங்கி தற்போது சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 03 பிப்ரவரி 2026 | ரூ.14,270 | ரூ.1,14,160 |
| 04 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 05 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 06 பிப்ரவரி 2026 | ரூ.14,250 | ரூ.1,14,000 |
| 07 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 08 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 09 பிப்ரவரி 2026 | ரூ.14,650 | ரூ.1,17,200 |
| 10 பிப்ரவரி 2026 | ரூ.14,580 | ரூ.1,16,640 |
| 11 பிப்ரவரி 2026 | ரூ.14,790 | ரூ.1,18,320 |
| 12 பிப்ரவரி 2026 | ரூ.14,600 | ரூ.1,16,800 |
இதையும் படிங்க : மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்த வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வெள்ளி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.