கும்பமேளா வைரல் சிறுமி மோனாலிசா போஸ்லே மற்றும் அவரது கணவர் ஃபர்மான் கான் சம்பவம் புதிய திருப்பம் எடுத்துள்ளது. ஃபர்மான் வெளியிட்ட வீடியோவில், அஜ்மீர் புஷ்கரில் மோனாலிசாவுடன் வந்ததாகவும், பின்னர் அவர் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் கூறினார். அவர் புஷ்கரில் தேடி அலையும் காட்சிகள் வைரலானதும், இது உண்மையா அல்லது போலீஸ் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நாடகம் ஆடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மோனாலிசாவின் தாய் லதா போஸ்லே, இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து, விசாரணையை திசைதிருப்ப திட்டமிட்ட முயற்சி என கூறினார்.