AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Indian Railway Introduce Rail One App | இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய யுடிஎஸ் செயலி மார்ச் 01, 2026 முதல் செயல்படாது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Feb 2026 09:04 AM IST

சென்னை, பிப்ரவரி 10 : 2026, மார்ச் 1 ஆம் தேதி முதல் யுடிஎஸ் (UTS – Unreserved Ticketing System) செயலி செயல்படாது என இந்திய ரயில்வே (Indian Railway) அறிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் இந்த செயலிக்கு பதிலாக ரயில் ஒன் (Rail One) செயலியை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. யுடிஎஸ் செயலியில் உள்ள அம்சங்கள் மட்டுமன்றி, கூடுதலான சில அம்சங்களும் இந்த ரயில் ஒன் செயலியில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ரயில்வேயின் அறிவிப்பு குறித்து ரயில் ஒன் செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி செயல்படாது – இந்திய ரயில்வே

இந்திய ரயில்கள் தொடர்பான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை பெற பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த செயலிகளில் ஒன்றுதான் இந்த யுடிஎஸ். இந்த செயலி மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட் பெற முடியும். பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட் ஆகியவற்றை இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

யுடிஎஸ் செயலிக்கு பதிலாக வரும் ரயில் ஒன் செயலி

இந்த நிலையில் மார்ச் 01, 2026 முதல் ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட்டுகளை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. ரயில் ஒன் செயலி மூலம் யுடிஎஸ் செயலியில் பெறக்கூடிய டிக்கெட் சேவைகளை தாண்டி இதர சேவைகளையும் பெற முடியும். குறிப்பாக ரயில்கள் தேடல், பிஎன்ஆர் நிலை, ரயிலை டிராக் செய்வது, உணவு ஆர்டர், டிக்கெட் ரீஃபண்ட் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும். அதுமட்டுமன்றி, ரயில்வே புகார்களை அளிக்கும் ரயில் மதாத் சேவையும் இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலக ஜாம்பவான்களுக்கு சவால் விடும் சர்வம் AI.. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு மழை

Follow Us