மத்திய கிழக்கில் மீண்டும் போர் சூழ்நிலை உருவாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் போருக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நடுவராக இருந்து ஏற்படுத்திய இரு வார போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த தீர்வும் இல்லாமல் முடிவடைந்தன.