AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யுபிஐ செயலியில் பணம் காணாமல் போவதை கவனித்திருக்கிறீர்களா? இதுதான் காரணம் – எப்படி தவிர்ப்பது?

Auto Pay Subscriptions : நம் பயன்படுத்தும் செயலிகளை பணம் செலுத்தி சப்ஸ்கிரிப்ஷன் முறையில் பயன்படுத்தியிருப்போம். இதற்காக கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஆட்டோ பே சந்தா செலுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நம் பயன்படுத்தாத நேரங்களில் அதனை எப்படி நிறுத்துவது என பார்க்கலாம்.

யுபிஐ செயலியில் பணம் காணாமல் போவதை கவனித்திருக்கிறீர்களா? இதுதான் காரணம் – எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Apr 2026 19:59 PM IST

சமீபகாலத்தில் யுபிஐ செயலிகளின் ஆட்டோ பே (Auto Pay) வசதி பலருக்கும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. ஓடிடி செயலிகள் முதல் பல மாதத் தவணை விஷயங்கள் வரை நாம் மறந்தாலும் மாதம் தவறாமல் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பெர்சனல் லோன் அல்லது  மாதத் தவணையில் பொருள் வாங்கும்போது, ஒரு மாதம் சரியான நேரத்தில் பணம் செலுத்த தவறினால் கூட அது நம் கிரெடிஸ் ஸ்கோரை பாதிக்கிறது. இதுபோன்ற தருணங்களில் இந்த ஆட்டோ பே  அம்சம் நமக்கு பெரிதும்  உதவும்.

யுபிஐ செயலியில் பணம் காணாமல் போவதை கவனித்திருக்கிறீர்களா?

அதே போல நம் பயன்படுத்தும் சில செயலிகளுக்கும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஆட்டோ பே சந்தா செலுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.  உதாரணமாக ஒரு சில செயலிகளை சில பயன்பாடுகளுக்காக சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இதையும் படிக்க : இனி வீட்டிலிருந்தபடியே ஈஸியா ஆதாரில் முகவரி மாற்றலாம் – வந்தாச்சு புது அப்டேட்!

அதற்காக ஆட்டோ பே மூலம் மாதமாதம் பணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் எடுத்திருப்போம். ஆனால் அதன் பயன் முடிந்த பிறகு ஆட்டோ பே பயன்பாடை நிறுத்த மறந்திருப்போம். இதனால் மாதம் தவறாமல் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் சென்றபடி இருக்கும். இதனால் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். இந்த கட்டுரையில் அந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என பார்க்கலாம்.

எப்படி தவிர்ப்பது?

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, கூகுள் பே செயலிகள் வழியாக இந்த செயல்முறை மிகவும் எளிதாக உள்ளது. முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் உங்கள் profile-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Payments & Subscriptions என்ற ஆப்சனைத் தேர்வு செய்து, அதில் உள்ள Subscriptions என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் நம் சப்ஸ்கிரைப் செய்துள்ள சேவைகள் காட்டப்படும். எந்த சேவைக்கு பணம் செலுத்தி வருகிறீர்கள். கடைசியாக எவ்வளவு தொகை செலுத்தியிருக்கிறோம் போன்ற அனைத்து விவரங்களையும் பார்க்கலாம். அதில் நாம் பயன்படுத்தாமல் இருந்த சேவைகளை ரத்து செய்யலாம்.

இதையும் படிக்க : முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்தும் அரசின் அசத்தல் திட்டம்.. என்ன தெரியுமா?

ஐபோன் பயனர்கள் தங்கள் ஆப் ஸ்டோர் வழியாக இந்த செயல்முறையை மேற்கொள்ளலாம். அதற்கு ஆப் ஸ்டோர் சென்று செட்டிங்கில் உள்ள Profile-ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் Subscriptions என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்தால்,  அதில் நம் சப்ஸ்கிரைப் செய்துள்ள சேவைகள் காட்டப்படும். பின்னர் தேவையற்ற செயலிகளை நீக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் சப்ஸ்கிரிப்ஷன் உடனியாக நீக்கப்படாது. நாம் முன்னதாக பணம் செலுத்திய கால அளவு வரை அந்த சேவையை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us