AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யுபிஐ மூலம் பணம் அனுப்புவதால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?

UPI Payment Impact : மாதத் தவணை சரியாக செலுத்தப்பட்டதா இல்லையா என்பது மட்டுமே நம் சிபில் ஸ்கோரை பாதிக்காது. உண்மையில் நம் அன்றாட செலவுகளும் சிபில் ஸ்கோரில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ மூலம் பணம் அனுப்புவதால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Apr 2026 19:54 PM IST

இந்தியாவில் மக்கள் தங்கள் சிபில் ஸ்கோர் என்பது கடன் மற்றும் கிரெடிட் கார்டு சார்ந்தது, அது அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது என நினைக்கிறார்கள். குறிப்பாக மாதத் தவணை சரியாக செலுத்தப்பட்டதா இல்லையா என்பது மட்டுமே நம் சிபில் ஸ்கோரை பாதிக்காது. உண்மையில் நம் அன்றாட செலவுகளும் சிபில் ஸ்கோரில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கறிப்பாக யுபிஐ மூலம் பணம் அனுப்புவது நம் சிபில் ஸ்கோரை நேரடியாக பாதிக்காது என்றாலும் ஆனால் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ மூலம் பணம் அனுப்புவதால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா?

பொதுவாக நாம் லோனுக்காகக வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது குறிப்பாக பெர்சனல் லோனுக்காக விண்ணப்பிக்கும்போது வங்கிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மட்டுமே பார்க்காது. நீங்கள் உங்கள் பணத்தை எப்படி செலவு செய்கிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும். இதற்காக உங்கள் வங்கி ஸ்டேட்ட்மென்ட்டை முழுமையாக ஆய்வு செய்யும். குறிப்பாக பில் செலுத்துவது, சப்ஸ்கிரிப்ஷனுக்கு பணம் செலுத்துவது, பிறருக்கு பணம் அனுப்புவது போன்றஉங்கள் தினசரி யுபிஐ பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்யும்.

இதையும் படிக்க : முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்தும் அரசின் அசத்தல் திட்டம்.. என்ன தெரியுமா?

உங்கள் வங்கி கணக்கில் மாதம் தவறாமல் சம்பளம் வருகிறதா, உங்கள் செலவுகள் பட்ஜெட்டிற்குள் இருக்கிறதா, உங்கள் வங்கிக் கணக்கில் எப்பொழுதும் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்படும். அது நீங்கள் உங்கள் பணத்தை பொறுப்புடன் கையாள்கிறீர்கள் என்பதை காட்டும். அதே நேரம் உங்கள் வங்கி கணக்கில் இருப்பு தொகை அடிக்கடி குறைந்தால், அடிக்கடி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் வெளியே சென்றால், வரவுக்கு மீறிய செலவு இருந்தால், நீங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக வங்கிகள் சந்தேகிக்க கூடும்.

யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் உங்கள் பொருளாதார சூழலை வெளிப்படையாக காட்டும். நீங்கள் உங்கள் மாத பில்களை சரியாக செலுத்துகிறீர்களா உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட் இருப்பு தொகை இருக்கிறதா, உங்கள் வரவு, செலவுகள் சீராக இருக்கிறதா என்பதை வங்கிகள் கவனிக்கத் தொடங்குகின்றன. இதற்காக வெளி நிறுவனங்களையும் வங்கிகள் அணுக கூடும். இதற்கு முன் நீங்கள் லோன் எடுக்கவில்லை என்றாலும் கூட உங்கள் வரவு செலவுகளை ஆய்வு செய்வதன் மூலம் வங்கிகள் உங்கள் தகுதியை முடிவு செய்கின்றன.

இதையும் படிக்க : விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்?.. 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

யுபிஐ செயலிகள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கத் தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில் மக்கள் செலவை பற்றி கவலைப்படுவதில்லை. இந்த பழக்கம் உங்கள் சிபில் ஸ்கோரில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் முக்கியமான நேரத்தில் உங்களுக்கு வங்கிகள் லோன் வழங்க மறுக்கலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Follow Us