AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்புறம் பாத்துக்கலாம்.. SIP முதலீட்டில் இந்த தவறை செய்யாதீங்க.. கோடிகளில் இழப்பு உங்களுக்கு தான்!

Common Mistake In SIP Investment | எஸ்ஐபி முதலீடு செய்து ஒருவர் மிக எளிதாக கோடீஸ்வரராக மாறிவிட முடியும். ஆனால், பலருக்கும் எஸ்ஐபியில் செய்யக்கூடாத இந்த முக்கிய தவறு உள்ளது தெரிவதில்லை. இந்த தவறு மூலம் அவர்கள் பல கோடிகளை இழக்க நேரிடலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Apr 2026 16:26 PM IST
இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள ஒரு முதலீடு தான் எஸ்ஐபி. இந்த எஸ்ஐபி திட்டத்தில் குறைந்த முதலீடு என்றாலும் கூட அதனை நீண்ட நாட்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் நல்ல லாபத்தை பெற முடியும். ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களது இளமை காலத்தில் முதலீடு செய்வதில்லை.

1 / 5
இப்போதுதான் பணிக்கு சேர்ந்துள்ளோம் பிடித்த இடங்களுக்கு செல்லலாம், பிடித்த பொருட்களை வாங்கலாம் என பலரும் நினைத்து எஸ்ஐபி முதலீட்டை தள்ளி போடுகின்றனர். ஆனால், அவர்கள் தங்களது இளமை காலத்தில் செய்யும் இந்த தவறு அவர்கள் தங்களின் முதுமையில் கோடி கணக்கான பணத்தை இழக்க செய்யும். 

2 / 5
உதாரணமாக ஏ என்ற நபர் தனது 30 வயதில் எஸ்ஐபி முதலீட்டை தொடங்குகிறார். இதுவே பி என்ற நபர் தனது 25 வயதில் எஸ்ஐபி முதலீட்டை தொடங்குகிறார். இவர்கள் இருவருமே மிக சரியாக, சீராக எந்த வித தடைகளும் இன்றி இலக்கை நோக்கி முதலீடு செய்து வருகின்றனர். இவர்கள் முதலீடு செய்வது ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால், இவர்கள் முதலீட்டின் முடிவில் தான் மிகப்பெரிய வித்தியாசம் தெரியும்.

3 / 5
அதாவது 30 வயதில் முதலீடு செய்ய தொடங்கிய நபர் தனது 60 வயது வரை முதலீடு செய்யும் பட்சத்தில் அவர் மொத்தமாக ரூ.36 லட்சம் முதலீடு செய்திருப்பார். அதன்படி, அவருடைய மொத்த கார்ப்பஸ் தொகை ரூ.3.52 கோடியாக இருக்கும். இதுவே 25 வயதில் முதலீடு செய்ய தொடங்கிய நபரின் மொத்த கார்ப்பஸ் ரூ.6.49 கோடியாக இருக்கும். 

4 / 5
30 வயதில் முதலீடு செய்தவர், 5 வருடங்கள் தானே தாமதமாக முதலீடு செய்கிறோம் என நினைத்திருக்கலாம். நீங்கள் நினைக்கும் அந்த வெறும் 5 ஆண்டுகள் தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்டு வட்டி அம்சத்தின் மூலமே இது சாத்தியமாகும். எனவே நீங்கள் முதலீடு செய்யும்போது இந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us