AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்மன் படத்தை எப்போது வெளியிட படக்குழு திட்டம்? வைரலாகும் தகவல்

Superstar Rajinikanths Dharman Movie Release Update | தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தர்மன். இந்தப் படம் எப்போது வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தர்மன் படத்தை எப்போது வெளியிட படக்குழு திட்டம்? வைரலாகும் தகவல்
தர்மன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2026 07:00 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி இந்தப் படம் உலக அளவில் ஒரு வாரத்தில் 549 கோடிகளைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போதும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், ராஷி கண்ணா, ராம் பொதினேனி, யோகி பாபு மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மன் படத்தை எப்போது வெளியிட படக்குழு திட்டம்:

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தை ஏப்ரல் 8 அல்லது ஏப்ரல் 15 ஆகிய தேதிகளில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏப்ரல் 15-ஆம் தேதி அதிக சாதகமான தேதியாகக் கருதப்படுகிறது; ஏனெனில், அதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாள் விடுமுறை நாட்கள், படத்தின் தொடக்க கால வசூலை அதிகரிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Vijay Antony: அப்பாவ போல… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jiiva: எதையும் எதிர்ப்பான் தகப்பன்… ஜீவாவின் தகப்பன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Follow Us