AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம் விலை அதிரடி உயர்வு.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. எவ்வளவு தெரியுமா?

Gold Price Increased By 560 In Chennai Today | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.70 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம் விலை அதிரடி உயர்வு.. நகை பிரியர்களுக்கு ஷாக்.. எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jul 2026 10:45 AM IST

சென்னை, ஜுலை 27 : சென்னையில் (Chennai) கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு நாள் கடும் விலை உயர்வை சந்திக்கும் தங்கம் மறுநாள் கடும் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடரும் கடும், ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் நிலையற்ற தன்மையை கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், இன்று (ஜூலை 27, 2026) தங்கம் விலை அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது. ஆனால் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

ஈரான் போராலா ஏற்பட்டுள்ள புவிசார் பதற்றங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜுலை மாதத்தில் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கு மீண்டும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உருவாகியுள்ள மோதம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : மொத்த குடும்பத்துக்கும் ஒரே ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது நல்லதா? பின்விளைவுகள் என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us