AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடங்கியது சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Suriyas 48th Movie Shooting Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 48-வதாக உருவாகும் படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடங்கியது சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
சூர்யா மற்றும் கயடு லோஹர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jul 2026 10:45 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் கடந்த ஏபரல் மாதம் வெளியான நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் இந்த 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக உருவாகி உள்ளது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கூட்டணியாக படம் உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி இருந்த நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடங்கியது சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்:

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 48-வது படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா இந்தப் படத்திற்காக இயக்குநர் டிஜே ஞானவேல் உடன் கூட்டணி வைத்துள்ளார். இவர்களின் கூட்டணி ஜெய் பீம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அமைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கயடு லோகஹர் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் பூஜை பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… இது ஃபேமிலி ட்ராமாவா? இல்ல ட்ராமா ஃபேமிலியா? தியேட்டரில் கான் சிட்டி படத்தை மிஸ் பண்ணீங்களா – ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த நடிகர்களுக்கு மட்டும் அம்மாவாக நடிக்கமாட்டேன்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம்!

Follow Us