இங்கிலாந்தில், அலுவலகத்தில் Aunty என்று அழைத்ததால் ஏற்பட்ட சர்ச்சை தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் சுகாதார ஊழியர், தன்னை சக ஊழியர் தொடர்ந்து “Aunty” என்று அழைத்தது மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.