AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2021ல் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம்? ஆச்சரிய தகவல்

Akshaya Tritiya : அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்க நினைக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என பார்க்கலாம்.

2021ல் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம்? ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Apr 2026 17:35 PM IST

அட்சய திருதியை நாளில் தங்கம்  தாங்குவது அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இந்தியர்களிடையே நிலவுகிறது. இதனால் வழக்கத்தை விட அந்த நாளில் மக்கள் அதிகம் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நிலவும் ஈரான் – அமெரிக்க இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உருவாகியுள்ளது.

2021ல் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம்?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கம் வாங்குவது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த  2021 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் 10 கிராம் 24 காரட் தங்க நாணயம் வாங்கியிருந்தால், இன்று அது எவ்வளவு லாபம் கொடுத்திருக்கும் என்ற கணக்குகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிக்க : தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம்!!

கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு சவரணுக்கு  ரூ. 46,500 ஆக இருந்தது. அதன்பின் 2022  ஆம் ஆண்டு ரூ. 51,510 ஆகவும், கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 61,300 ஆகவும், 2024 ஆண்டு  ரூ. 73,240, 2025 ஆம் ஆண்டு ரூ. 96,500 ஆகவும் இருந்தது. இது  வருடாவருடம் தங்கத்தின் விலை எப்படி உயர்ந்து வந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.

இதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு  ஒரு 10 கிராம் தங்க நாணயம் வாங்கியிருந்தால், 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 135 சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கும். தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ. 1, 55,000 என கூறப்படுகிறது. அதாவது வருடம்ம் நமக்கு 39 முதல் 44 சதவிகிதம் வரை லாபம் உயர்ந்தபடி இருந்திருக்கிறது.

இந்த அளவுக்கு தங்கத்தின் விலை உயர்வதற்கான முக்கிய காரணங்களாக உலக அளவில் பொருளாதார நிலைமைகள், மத்திய வங்கிகளின் தங்க சேமிப்பு அதிகரிப்பு, மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?

ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவில் தொடர்ந்து முதலீடு செய்வது, நீண்ட காலத்தில் பெரிய லாபத்தை தரும் என்பதை இந்த எடுத்துக்காட்டு தெளிவாக காட்டுகிறது. இதனால் அட்சய திருதியை போன்ற பாரம்பரிய தினங்களில் தங்கம் வாங்குவது வெறும் நம்பிக்கை மட்டுமல்லாமல், ஒரு வலுவான முதலீடாகவும் மாறியுள்ளது. இதனால் தான் மக்கள் அன்றைய தினம் ஆர்வமாக தங்க நகை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.

Follow Us