Akshaya Tritiya
அட்சய திருதியை என்பது இந்துக்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் மூன்றாவது நாள் வெகு விமரிசையாக கடைபிடிக்கப்படும். அட்சயம் என்பது அல்ல குறையாதது என பொருள்படும். அப்படியான இந்த நாளில் நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது மும்மடங்கு பலனை கொடுக்கும் என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புராணங்களின்படி இது பரசுராம முனிவரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பலருக்கும் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் சிறப்பு என்ற எண்ணம் இருக்கும். ஆனால் உண்மையில் அட்சய திருதியை நாளில் நாம் தானம் செய்வது மிகவும் புண்ணியத்தை தரும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நாளில் வீடுகளிலும் கோயில்களிலும் லட்சுமி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அட்சய திருதியை நாளில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு, விரத முறை, தானம் செய்தல் போன்றவை தொடர்பான செய்திகள் அனைத்தையும் நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
ஆண்டுக்கு 30% வருமானம் – அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறந்ததா?
Akshaya Tiritiya : அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது, முதலீட்டுப் பயணத்திற்குச் சிறந்த தொடக்கமாக அமையக்கூடும். ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக, தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம் சிறிய அளவுகளில் வாங்குவதே சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- Karthikeyan S
- Updated on: Apr 18, 2026
- 22:42 pm IST
2021ல் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம்? ஆச்சரிய தகவல்
Akshaya Tritiya : அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்க நினைக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Apr 16, 2026
- 17:35 pm IST
அக்ஷய திருதியையில் தங்கம் வாங்கினால் என்ன பலன்..?
Akshaya Tritiya:அக்ஷய திருதியையில் தங்கம் வாங்குவது செல்வ வளம் மற்றும் லட்சுமி அருளை தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் வாங்கப்படும் தங்கம் குறையாமல் வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், எதிர்கால நிதி ஆதரவாகவும் பயன்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Apr 15, 2026
- 19:42 pm IST
அக்ஷய திருதியையில் தங்கம் மட்டுமல்ல… வாங்கக்கூடிய மாற்று பொருட்கள் என்ன?
Shopping on Akshaya Tritiya: அக்ஷய திருதியையில் தங்கம் தவிர வெள்ளி பொருட்கள், பூஜை சாதனங்கள் மற்றும் வீட்டு பயன்பாட்டு பாத்திரங்கள் வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது. இந்த நாளில் வாங்கப்படும் பொருட்கள் வளத்தையும் நல்ல தொடக்கத்தையும் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய முதலீடுகள், சிறிய தொழில் தொடக்கம் அல்லது சேமிப்பு திட்டங்கள் ஆரம்பிப்பதும் சிறந்த தேர்வாகும்.
- Sivasankari Bose
- Updated on: Apr 15, 2026
- 12:30 pm IST
அட்சய திருதியை 2025 : தங்கம், வெள்ளியில் என்ன வாங்கலாம்? ராசிக்கேற்ற கணிப்புகள்!
Akshaya Tritiya 2025 : அட்சய திருதியை அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, உங்கள் ராசிக்கு ஏற்ற நகைகளை வாங்கினால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். உங்கள் ராசியின் அதிபதி கிரகத்தின் அடிப்படையில் தங்கம் அல்லது வெள்ளி தேர்வு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
- C Murugadoss
- Updated on: Apr 30, 2025
- 18:04 pm IST
Akshaya Tritiya: அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி வழிபாடு.. என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை அன்று மகாலட்சுமியின் அருளைப் பெற தர்மம் செய்வது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டில் மகாலட்சுமி வழிபாடு, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுதல், தானம் வழங்குதல் போன்றவற்றை இந்நாளில் செய்யலாம். இந்த விசேஷ நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியாவிட்டால் உங்களால் முடிந்த அளவுக்கு தானம் செய்யுங்கள்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:05 pm IST
Akshaya Tritiya: லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!
அட்சய திருதியை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படுகிறது. இது லட்சுமி தேவியை மகிழ்விக்க உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்தல், ஸ்வஸ்திக் வரைதல், விளக்கேற்றல், கோமதி சக்கரங்களை வைத்தல் போன்றவை செல்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:05 pm IST
அட்சய திருதியை 2025: தங்கம் வாங்க PhonePe மற்றும் Paytm அளிக்கும் சலுகைகள்!
Paytm and PhonePe Akshaya Tritiya Offers : அட்சய திருதியை 2025ல் PhonePe மற்றும் Paytm டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் தங்கத்திற்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் திட்டங்களை அளித்திருக்கின்றன. தங்கம் வாங்கும் பயனர்கள் PhonePe மற்றும் Paytm ஆகியவற்றின் மூலம் தங்கம் வாங்கும்போது சலுகைகளை பயன்படுத்தி அதிக லாபம் பெற முடியும்.
- Karthikeyan S
- Updated on: Apr 30, 2025
- 18:05 pm IST
Akshaya Tritiya 2025: அட்சய திருதியை.. இந்த விஷயங்களை செய்தால் லட்சுமி அருள் கிட்டுமாம்!
அட்சய திருதியை இந்துக்களின் மிகவும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது 2025ல் ஏப்ரல் 30 அன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் எந்த நல்ல காரியமும் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. லட்சுமி, குபேரன், சூரிய பகவான் ஆகியோரை வழிபடுவதும், தான தர்மங்கள் செய்வதும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:05 pm IST
Akshaya Tritiya 2025: அட்சய திருதியை.. உங்கள் ராசிக்கு என்ன பொருள் வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று உங்கள் ராசிக்கு ஏற்ற மங்களகர பொருட்களை வாங்குவதன் மூலம் செழிப்பையும் மகிழ்ச்சியையும் பெறலாம் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்கள் வீட்டிற்கு நன்மைகளை தரும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே உங்கள் ராசிக்கு ஏற்ற பொருட்களைத் தெரிந்துகொண்டு வாங்கவும்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:06 pm IST
Akshaya Tritiya: அட்சய திருதியைக்கு தங்கம் தவிர வேறு என்ன வாங்கலாம்?
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாள் நகை ஆபரணங்கள் வாங்க சிறந்த நாள் என சொல்லப்படுகிறது. அதேசயம் அவற்றை வாங்க முடியாதவர்கள் செல்வ வளத்தை அள்ளித்தரும் நாளான இந்நாளில் பருப்பு வகைகள், காய்கறிகள், நவதானியங்கள் போன்றவற்றை வாங்குவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:06 pm IST
Akshaya Tritiya: அட்சய திருதியை… வீட்டில் பின்பற்ற வேண்டிய வாஸ்து டிப்ஸ்!
2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 அன்று வருகிறது. இந்த நாளில் லட்சுமி கடாட்சத்தைப் பெற, வீட்டில் வாஸ்துப்படி பல விஷயங்களை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடைந்த பொருட்கள், அழுக்கு உடைகள், உடைந்த துடைப்பம் போன்றவற்றை அகற்றுவது முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. இவை எதிர்மறை சக்தியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:06 pm IST
நெருங்கும் அட்சய திரிதியை… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு?
Chennai Gold Price : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,200 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே, தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- Umabarkavi K
- Updated on: Apr 30, 2025
- 18:07 pm IST
Akshaya Tritiya: நோட் பண்ணுங்க.. அட்சய திரிதியை நாளில் என்ன வாங்கக்கூடாது?
அட்சய திருதியை 2025 ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது நல்லது என நம்பப்படுகிறது. அதேசமயம் சில பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. இல்லாவிட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம் அல்லது துரதிர்ஷ்டம் வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:09 pm IST
Akshaya Tritiya: அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?
அட்சய திருதியை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படுகிறது. செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்க இந்நாளில் வீட்டின் வடக்கு திசை, நீர்நிலைகள், மற்றும் பிரதான நுழைவாயில் ஆகிய இடங்களில் விளக்கேற்ற வேண்டும். இது செல்வம், செழிப்பு, மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற உதவும் என்று நம்பப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 30, 2025
- 18:09 pm IST