Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Akshaya Tritiya: அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?

அட்சய திருதியை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படுகிறது. செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்க இந்நாளில் வீட்டின் வடக்கு திசை, நீர்நிலைகள், மற்றும் பிரதான நுழைவாயில் ஆகிய இடங்களில் விளக்கேற்ற வேண்டும். இது செல்வம், செழிப்பு, மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற உதவும் என்று நம்பப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

Akshaya Tritiya: அட்சய திரிதியையில் விளக்கேற்ற சிறந்த திசை எது?
அட்சயை திரிதியை
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Apr 2025 18:09 PM

இந்து மதத்தைப் பொறுத்தவரை வருடம் 365 நாட்களும் பண்டிகைகள், விசேஷ தினங்கள், ஒவ்வொரு கடவுளுக்குரிய முக்கிய நாட்கள் என ஆன்மிகத்தில் திளைக்கும் அளவுக்கான நிகழ்வுகள் (Spiritual Events) வந்துக் கொண்டிருக்கும். தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை பிறந்திருக்கும் இந்ந மாதத்தில் வரும் முக்கிய பண்டிகை என்றால் அது அட்சய திரிதியை (Akshaya Tritiya) தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும்  அமாவாசை திதியின் மூன்றாம் நாளில் அட்சய திருதி வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை 2025 ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியை மகிழ்விக்க மக்கள் விரும்புவார்கள். அதனால் இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இவற்றை வாங்குவது மட்டுமல்லாமல் இந்த விசேஷ நாளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.  அந்த வகையில் அட்சய திருதியை அன்று உங்கள் வீட்டில் எங்கு விளக்கேற்றுவது, அதனால் கிடைக்கப்பெறும் பலன்கள் என்னவென்று நாம் காணலாம்.

விளக்கேற்ற சிறந்த திசை எது?

பொதுவாக ஒரு வீட்டின் அமைப்பை எடுத்துக் கொண்டால் வடக்கு திசை செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் மற்றும் லட்சுமி தேவியின் திசையாகக் கருதப்படுகிறது. அதனால் அட்சய திருதியை அன்று வீட்டில் இந்த திசையில் விளக்கேற்றுவது செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியைத் தரும் என்று நம்பப்படுகிறது.

வீட்டில் தண்ணீர் வைக்கும் இடம்

நம்முடைய வீட்டில் குடிநீரை சேமித்து வைப்பதற்கு சமையலறையில் ஒரு சிறப்பு இடம் என்பது உள்ளது. அட்சய திருதியை அன்று மாலையில் இங்கேயும் ஒரு விளக்கை ஏற்றி வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்கள் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தில் ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டு வளாகத்தில் கிணறு, குளம் அல்லது வேறு நீர் ஆதாரம் இருந்தால், அங்கேயும் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு அருகில் விளக்குகளை ஏற்றுவது இயற்கைக்கும் கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு வழி என்பதை எப்போதும் மறக்காதீர்கள்.

அதேசமயம் அட்சய திருதியை அன்று மாலையில் வீட்டின் பிரதான நுழைவாயிலின் இருபுறமும் நெய்யால் செய்யப்பட்ட மண் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.  காரணம் இங்கிருந்துதான் லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. வெளிச்சமும் தூய்மையும் உள்ள இடத்தில் மட்டுமே லட்சுமி தேவி வசிக்கிறாள். இங்கு தீபம் ஏற்றினால் செல்வமும், வளமும் பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

(இணையத்தில் அட்சய திரிதியைப் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்  உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பில்லை)

நாடு கடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு கடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!...
விழிஞ்சம் துறைமுகம் இந்தியப் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம்
விழிஞ்சம் துறைமுகம் இந்தியப் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம்...
சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் பதஞ்சலி தயாரிப்புகள்
சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் பதஞ்சலி தயாரிப்புகள்...
தமிழகத்தில் சூர்யாவின் ரெட்ரோ முதல் நாளில் எவ்வளவு வசூல்?
தமிழகத்தில் சூர்யாவின் ரெட்ரோ முதல் நாளில் எவ்வளவு வசூல்?...
ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்
ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை கயாடு லோஹர் ஓபன் டாக்...
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? எது சரியானது?
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? எது சரியானது?...
மதிப்பெண் குறைந்தால் ஃபெயில்.. சிபிஎஸ்இ முடிவுக்கு எதிர்ப்பு
மதிப்பெண் குறைந்தால் ஃபெயில்.. சிபிஎஸ்இ முடிவுக்கு எதிர்ப்பு...
சென்னைக்கு அருகில் ஒரு நாள் சுற்றுலா: சிறந்த 5 நீர்வீழ்ச்சிகள்...
சென்னைக்கு அருகில் ஒரு நாள் சுற்றுலா: சிறந்த 5 நீர்வீழ்ச்சிகள்......
மிதுன ராசிக்கு செல்லும் குரு பகவான்.. நடக்கப்போகும் மாற்றம் என்ன?
மிதுன ராசிக்கு செல்லும் குரு பகவான்.. நடக்கப்போகும் மாற்றம் என்ன?...
கைதி 2 கன்ஃபார்ம்... ஆனால் ரோலக்ஸ் - லோகேஷ் கனகராஜ்
கைதி 2 கன்ஃபார்ம்... ஆனால் ரோலக்ஸ் - லோகேஷ் கனகராஜ்...
வெயில் காலம்: குழந்தைகள் மற்றும் முதியோரை பாதுகாக்கும் வழிகள்..!
வெயில் காலம்: குழந்தைகள் மற்றும் முதியோரை பாதுகாக்கும் வழிகள்..!...