தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. முதல்ல இந்த விஷயங்களை கவனியுங்கள்!
Gold ETF Investment | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் தங்க ஈடிஎஃகள் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்வதற்கு முன்னதாக தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் மிக சிறந்த முதலீடாக உள்ள நிலையில், பலரும் அதில் ஆர்வத்துடன் முதலீடு செய்வர். தங்க ஆபரணங்களை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி, சேதாரம் ஆகியவை சேர்த்து மொத்தமாக அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும். அவ்வாறு கூடுதல் தொகை செலுத்தாமல், முதலீடாக மட்டுமே தங்கத்தை நினைக்கும் நபர்கள் இந்த தங்க ஈடிஎஃப்களில் (ETF – Exchange Traded Fund) முதலீடு செய்வர். இளைய சமூகத்தினர் மத்தியில் இந்த தங்க ஈடிஎஃப் முதலீடு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. காரணம் இந்த தங்க ஈடிஎஃப்களில் ரூ.130 முதலே முதலீடு செய்ய முடியும். இதன் காரணமாக பலருக்கும் இது தங்கம் வாங்குவதற்கான சிறந்த வழியாக உள்ளது. ஆனால், தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்வதற்கு முன்னதாக தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்க ஈடிஎஃப் முதலீடு – தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்வதற்கு முன்னதாக தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
சிறந்த ஈடிஎஃபை தேர்வு செய்ய வேண்டும்
பொதுமாக்கள் மத்தியில் தங்க ஈடிஎஃப் முதலீடு மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் இந்த ஈடிஎஃப்களை வழங்கி வருகின்றன. எனவே தங்க ஈடிஎஃபில் முதலீடு செய்வதற்கு முன்னதாக எந்த ஈடிஎஃப்பில் சந்தை மூலதனம் அதிகமாக உள்ளது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் கோல்டு ஈஎடிஎஃப் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : இதுவரை இல்லாத அளவு அதிக அகவிலைப்படி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய தகவல்!
எக்ஸ்பென்ஷன் ரேஷியோவில் கவனம் கொள்ள வேண்டும்
மியூச்சுவல் ஃப்ண்டுகளை போலவே ஈடிஎஃப் திட்டங்களிலும் எக்ஸ்பென்ஷன் ரேஷியோ (Expansion Ratio) உள்ளது. நம் முதலீட்டை நிர்வகிக்க நாம் முதலீடு செய்யும் குறிப்பிட்ட தொகையை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளும். எனவே எந்த நிறுவனம் குறைவான எக்ஸ்பென்ஷன் ரேஷியோவை கொண்டுள்ளதோ அதனை தேர்வு செய்து முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க : இந்த சாலைகளில் குறைவான சுங்க கட்டணம்.. அமலுக்கு வந்த அசத்தல் அம்சம்!
அதிகபட்ச சந்தை மூலதனம்
அதிகபட்ச சந்தை மூலமதனம் கொண்ட தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும்போது நாம் நமக்கு தேவையான நேரத்தில் உடனடியாக விற்று பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அதிகபட்ச சந்தை மூலதனம் கொண்ட ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய வேண்டும்.