AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதன்முறையாக சைகை மொழியுடன் ஒளிபரப்பாகும் ஈஷாவின் சிவராத்திரி விழா

ஈஷா ஃபவுண்டேசன் நடத்தும் மகாசிவராத்திரி விழாவில் இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கா சைகை மொழி மொழிபெயர்ப்புடன் உலக அளவில் நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பாகிறது.

முதன்முறையாக சைகை மொழியுடன் ஒளிபரப்பாகும் ஈஷாவின் சிவராத்திரி விழா
ஈஷா மகாசிவராத்திரி விழா
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Feb 2026 16:26 PM IST

கோயம்புத்தூர், பிப்ரவரி 15: ஈஷா ஃபவுண்டேசன் நடத்தும் மகாசிவராத்திரி 2026 விழா பிப்ரவரி 15, 2026 அன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஈஷா யோகா மைய வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெறுகிறவுள்ளது. கூடுதலாக இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கா சைகை மொழி மொழிபெயர்ப்புடன் உலகஅளவில் நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக காது கேளாதோருக்கு சைகை மொழியில் ஒளிபரப்பு

இந்த விழா 23 இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் நேரலை செய்யப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒடியா, அசாமி, குஜராத்தி, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், நேபாளி, ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், இத்தாலி, ருமேனியன், அரபிக், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆன்மிக முக்கியத்துவம் மிக்க இந்த இரவை இணைந்து கொண்டாட முடியும்.

இந்த ஆண்டின் மகாசிவராத்திரி விழாவின் கருப்பொருள் கங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கங்கை நதியின் ஆன்மிக, பண்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சத்குரு முன்னிலையில் தியானங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பிக்கின்றன.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

பிரபல கலைஞர்களான ஆதித்யா காட்வி, பிரஷாந்த் சோனாக்ரா, ஸ்வரூப் கான், பிளேஸ், ஹரிஷ் சாகனே, தோல் தாஷா குழு உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். மேலும் முதல் முறையாக, சத்குரு யோகேஸ்வர லிங்க மஹா அபிஷேகம் என்ற நிகழ்வை நடத்தவுள்ளார். உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கானோர் இந்த இலவச ஆன்மிக நிகழ்வில் பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் 170க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கோடிக்கணக்கானோர் இணையவழியாக இணையும் இந்த மகாசிவராத்திரி, உலகின் மிகப்பெரிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது. இசை, தியானம் மற்றும் ஆன்மிக உற்சாகத்தின் மூலம் சிவ ஆற்றலை கொண்டாடும் இந்த இரவு, பக்தர்களுக்கு மறக்க முடியாத ஆன்மிக அனுபவமாக அமைகிறது.

Follow Us