உதயநிதி பற்றி எங்களுக்கு கவலை இல்லை – தவெக நிர்மல் குமார்..
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு மாறாக துணை முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இதுதான் குடும்ப அரசியல். ஒவ்வொரு குடும்பத்திலும் தகப்பன் ஒரு விசேஷத்திற்கு செல்ல முடியவில்லை என்றால், மாறாக மகன் அந்த விசேஷத்திற்கு செல்வார்.
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு மாறாக துணை முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இதுதான் குடும்ப அரசியல். ஒவ்வொரு குடும்பத்திலும் தகப்பன் ஒரு விசேஷத்திற்கு செல்ல முடியவில்லை என்றால், மாறாக மகன் அந்த விசேஷத்திற்கு செல்வார். அதுதான் இங்கும் நடக்கிறது. உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரையில் அரசியல் என்றால் என்ன என்றும், தமிழக அரசு எப்படி செயல்படுகிறது என்றும் அவருக்கு தெரியாது. உதயநிதி ஸ்டாலினைப் பற்றி எங்களுக்கு நிச்சயமாக எந்தக் கவலையும் கிடையாது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்த குடும்ப ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டப்படும் என தாவேக்காவின் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்.
