மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு 1 முதல் 2 நாட்களில் கிடைத்த சமையல் எரிவாயு, தற்போது பல இடங்களில் ஒரு வாரம் முதல் 40 நாட்கள் வரை தாமதமாக கிடைக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பல மாநிலங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்த ஆய்வில், சமையல் எரிவாயு கிடைப்பதில் பெரிய சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில், குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.