இந்தியாவில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சுமார் 17 சதவீதம் வரை தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், இப்போது தங்கம் வாங்கலாமா? என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1,49,650 ரூபாயாக உள்ளது. இதற்கு முன் பதிவான 1,80,779 ரூபாய் என்ற உச்ச விலையிலிருந்து சுமார் 31,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.