AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆதார் கார்டு மூலம் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.. அட இந்த திட்டம் குறித்து உங்களுக்கு தெரியாதா?

Get 50,000 Loan Using Aadhaar Card | மத்திய அரசு பொதுமக்களுக்கான பல்வேறு அட்டகாசமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதால் பிஎம் ஸ்வநிதி. இந்த திட்டத்தில் ஆதார் கார்டை வைத்து ரூ.50,000 வரை கடன் பெற முடியும்.

ஆதார் கார்டு மூலம் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.. அட இந்த திட்டம் குறித்து உங்களுக்கு தெரியாதா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Feb 2026 11:22 AM IST

இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியோர் உதவித்தொகை பெறுவது வரை பல சேவைகளுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமானதாக உள்ளது. ஆனால், பலருக்கும் தெரியாத அட்டகாசமான அம்சம் ஒன்று ஆதார் கார்டில் உள்ளது. அதாவது, ஆதார் கார்டை பயன்படுத்தி ரூ.50,000 வரை கடன் பெற முடியும். இந்த கடனை பெற யார் தகுதியானவர்கள், இந்த கடனுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டு மூலம் கடன் வழங்கும் மத்திய அரசு

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிஎம் ஸ்வநிதி (PM SVANidhi). கொரோனா காலக்கட்டத்தில் ஏராளமான சிறு, குறு மற்றும் சாலையோர வியாபாரிகள் கடைகளை மூடிய நிலையில், அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : மார்ச் 1 முதல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!

மூன்று தவணைகளாக வழங்கப்படும் கடன்

இந்த திட்டத்தில் மொத்தமாக பணம் வழங்கப்படாமல் மூன்று தவணைகளாக பணம் வழங்கப்படும். அதாவது இந்த திட்டத்தில் முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படும். அந்த கடனை முறையாக ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் இரண்டாவது தவணையில் ரூ.20,000 வழங்கப்படும். அந்த பணத்தை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் மூன்றாவது தவணையாக ரூ.50,000 வரை வழங்கப்படும்.

இதையும் படிங்க : FD : எஃப்டி திட்டங்களுக்கு 7.05% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தகுதி வாய்ந்த வியாபாரிகள் மற்றும் பயனாளிகள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பிற அடையாள அட்டைகளை சமர்பித்து வங்கிகள் மூலம் இந்த கடனுக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த வகை கடன் பெற எந்தா விதமான பிணையமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us