Viral Video : மகாராஷ்டிரா மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்.. வைரல் வீடியோ!
3000 Gas Cylinders Swept Away In Flood In Maharashtra | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 3000 கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் நம்மை சுற்றி நடைபெறும் பல வகையான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பபவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கேஸ் சிலிண்டர்கள்
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராய்காட் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருக்கு எச்பி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் புகுந்த வெள்ள நீர், அங்கிருந்த கேஸ் சிலிண்டர்களை அடித்துச் சென்றுள்ளது. முழுமையான மற்றும் காலியான என சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : Viral Video : எம்பயர் ஸ்டேட் கட்டட ப்ரொபோசலை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடி.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Hundreds of LPG Gas cylinders got washed away in Floods and people are looting them.
This looks so bizzare pic.twitter.com/bk41ElgmAy— Woke Eminent (@WokePandemic) July 8, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பாலத்தை கடந்து செல்லும் வெள்ள நீரில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவ்வாறு தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் கேஸ் சிலிண்டர்களை பாலத்தின் மீது நின்றுக்கொண்டு அந்த பகுதியில் இருக்கும் மக்கள் மீட்கும் பணிகளை செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : எம்பயர் ஸ்டேட் மேல் ஏறி ப்ரொபோசல்.. கைது செய்யப்பட்ட காதல் ஜோடி..
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.