AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்பயர் ஸ்டேட் மேல் ஏறி ப்ரொபோசல்.. கைது செய்யப்பட்ட காதல் ஜோடி..

ஏஞ்சலா நிக்கோலாவ் மற்றும் இவான் பீர்கஸ் ஆகியோர் உலகின் மிக உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறி சாகசம் செய்வதன் மூலம் பிரபலமானவர்கள். அவர்களது சாகச வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்த ஏஞ்சலா, சிறுவயதிலேயே ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றவர்.

எம்பயர் ஸ்டேட் மேல் ஏறி ப்ரொபோசல்.. கைது செய்யப்பட்ட காதல் ஜோடி..
வைரலான காதல் ஜோடி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Jul 2026 10:10 AM IST

ஜூலை 4, 2026: அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் ஆபத்தான முறையில் ஏறிச் சென்று திருமண ப்ரொபோசல் செய்த ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சாகச வீரர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்களான ஏஞ்சலா நிக்கோலாவ் மற்றும் இவான் பீர்கஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், கருப்பு நிற உடையணிந்த இந்த ஜோடி, பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் பயன்படுத்தாமல் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் ஆன்டெனா உச்சிவரை ஏறிச் செல்வது பதிவாகியுள்ளது. உச்சியை அடைந்ததும், “அதிகாரத்தின் மீதான காதலை விட, காதலின் சக்தி வெல்லும் போது உலகம் அமைதியை அறியும்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த பதாகையை அவர்கள் விரித்தனர்.

எம்பயர் ஸ்டேட் மேல் ஏறி ப்ரொபோசல் – வைரல் வீடியோ:

அதனைத் தொடர்ந்து, இவான் பீர்கஸ் தனது காதலியான ஏஞ்சலா நிக்கோலாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டார். இந்த காதல் முன்மொழிவு வீடியோ உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், அனுமதியின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி கட்டிடத்தின் உச்சியில் ஏறியதால், இருவரையும் நியூயார்க் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கட்டிடத்திற்குள் நுழைதல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, சொத்துச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குற்றவியல் அத்துமீறல் தொடர்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து எம்பயர் ஸ்டேட் கட்டிட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “அனுமதியின்றி நடைபெற்ற இந்த சம்பவம் நியூயார்க் காவல்துறையின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தச் சம்பவத்தால் கட்டிடத்தில் இருந்த வாடகையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் அல்லது பார்வையாளர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

சாகச ஜோடியின் பின்னணி என்ன?

ஏஞ்சலா நிக்கோலாவ் மற்றும் இவான் பீர்கஸ் ஆகியோர் உலகின் மிக உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறி சாகசம் செய்வதன் மூலம் பிரபலமானவர்கள். அவர்களது சாகச வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.

சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்த ஏஞ்சலா, சிறுவயதிலேயே ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றவர். பின்னர் உயரமான கட்டிடங்களின் மேற்கூரைகளில் ஏறி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார்.

பல உலகப் புகழ்பெற்ற கட்டிடங்களில் சாகசம்:

2016-ஆம் ஆண்டு ஏஞ்சலாவும், இவானும் சந்தித்த பிறகு இணைந்து பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் கோல்டின் ஃபைனான்ஸ் 117 கட்டிடம், மலேசியாவின் உலகின் இரண்டாவது உயரமான மெர்டேகா 118 கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறி சாதனை படைத்துள்ளனர்.

இவான் தனிப்பட்ட முறையிலும் பிரான்சின் ஈஃபிள் கோபுரம், சீனாவின் ஷாங்காய் டவர், ஷென்செனில் உள்ள ஷுன் ஹிங் ஸ்கொயர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கட்டிடங்களில் சாகசம் செய்துள்ளார்.

Follow Us