AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இந்திய கடைக்காரரின் நேர்மையை பாராட்டிய போலந்து பெண்.. வைரல் வீடியோ!

Polish Woman Praises Indian Shopkeeper's Honesty | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், போலந்து பெண் ஒருவர் இந்திய கடைக்காரரின் நேர்மையை பாராட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : இந்திய கடைக்காரரின் நேர்மையை பாராட்டிய போலந்து பெண்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2026 22:11 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில சுவாரஸ்ய மற்றும் ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் அடங்கும். அந்த வகையில், இந்திய கடைக்காரரின் நேர்மை குறித்து பாராட்டி போலந்து பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய கடைக்காரரின் நேர்மை – போலந்து பெண் வெளியிட்ட வீடியோ

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் அவர்கள், தங்களது பயணம் குறித்த சம்பவங்களை வீடியோக்களாக பதிவு செய்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நடைபெறும் கசப்பான சம்பங்கள் மற்றும் இனிப்பான சம்பவங்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த போலந்து பெண் தனக்கு நடைபெற்ற இனிப்பான சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : எறும்பை ஆட்டிப்படைக்கும் பூஞ்சைக்கு ஆப்பு வைத்த புதிய பூஞ்சை!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Dominika Patalas-Kalra (@domipatalas)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசு போலந்து பெண் ஒருவர், தான் 4 நாட்களுக்கு முன்பு மருந்தகம் ஒன்றில் சில மருந்துக்களை வாங்கியதாகவும், அதனை கடையிலே விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறுகிறார். நான், நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த மருந்தகத்திற்கு சென்று எனது மருந்து இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : கடல் அலையில் சிக்கி காணாமல் போன நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அந்த பெண் கடைக்கு சென்றதும், அந்த பெண்ணுக்காக நான்கு நாட்களுக்கு முன்பு பேக் செய்யப்பட்ட மருந்தை கடைக்காரர் எடுத்து கொடுக்கிறார். அதனை அந்த பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொள்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us