AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : கடல் அலையில் சிக்கி காணாமல் போன நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Video Of Man Swept Away By Sea Waves | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் கர்நாடகாவில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : கடல் அலையில் சிக்கி காணாமல் போன நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jun 2026 21:02 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், கடற்கரையில் அமர்ந்துக்கொண்டு இருந்த நபர் ஒருவர், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நபர்

கடற்கரைக்கு சென்று அங்கு சற்று நேரம் அமர்ந்திருப்பது மன நிம்மதியை கொடுக்கும். இதன் காரணமாக தான் பலரும் கடற்கரைக்கு செல்வர். அந்த வகையில் கர்நாடகாவில் கடற்கரையில் அமர்ந்துக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர், வேகமாக வந்த கடல் அலைகளில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஆஸ்திரேலியா சுற்றுலா பயணியிடம் முத்தம் கேட்டு தொல்லை கொடுத்த நபர்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கடற்கரையில் உள்ள பாறை ஒன்றில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வேகமாக வந்த கடல் அலைகள் அவரை கீழே தள்ளி விடுகின்றன. பிறகு அவர் கடல் அலைகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார். சிறிது நேரம் கழித்து அவர் மாயமாகி விடுகிறார். அந்த நபரின் உடல் மீட்பு துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us