Viral Video : தாய்லாந்தில் தனியாக பயணம் செய்த பணிப்பெண்.. இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!
Indian House Help Woman's Solo Trip In Thailand | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தாய்லாந்தில் தனியாக பயணம் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் ஆச்சர்யமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். சில வீடியோக்கள் நாமும் இத்தகைய செயல்களை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்கும். அத்தகைய வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைராலி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதாவது, வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் தாய்லாந்தில் தனியாக ஒரு நாளை கழித்தது தொடர்பான வீடியோ தான் அது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாய்லாந்தில் தனியாக பயணம் செய்த பணிப்பெண்
அனிஷ் என்ற டிஜிட்டல் கண்டன் கிரியேட்டரின் வீட்டில் ரேஷ்மா என்ற பெண் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். இந்த நிலையில், அனிஷ் அவரை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விடுதிக்கு சென்ற உடன் அனிஷ், ரேஷ்மாவை இந்த ஒரு நாள் முழுவதையும் நீங்கள் தனியாக செலவு செய்ய வேண்டும் என கூறிவிட்டு சென்று விடுகிறார். புது ஊர், புது மக்கள், புது மொழி என எதை குறித்தும் கவலை கொள்ளாமல் ரேஷ்மா தனது பயணத்தை தனியாக மேற்கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ஹோலி பண்டிகையின்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான கொரியா கர்ப்பிணி பெண்?.. விளக்கம் அளித்த நபர்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
🥹✈️ A domestic worker’s first trip outside India is winning hearts online!
Reshma explored Thailand solo in her favourite saree, carrying homemade puran poli to make new friends. 🇹🇭❤️
A simple, heartwarming story of courage and self-discovery. 🌍✨#ViralVideo #ThailandTrip pic.twitter.com/nd0cVrfD1I
— jeetwinapk (@jeetwin_apk) June 16, 2026
அந்த வீடியோவில், ரேஷ்மா தனக்கு தெரிந்த இனிப்பு ஒன்றை தயார் செய்துக்கொண்டு வெளியே செல்கிறார். அவர் தான் சந்திக்கும் மனிதர்களிடம் தான் தயார் செய்த இனிப்பை வழங்கி நட்பாக பழகுகிறார். மொழி தெரியவில்லை, கலாச்சாரம் தெரியவில்லை என்றால் தன்னால் முடிந்த அளவு அவர் மனிதர்களுடன் பழகுகிறார். இவற்றை அனைத்தையும் அவர் தனது ஸ்மார்ட்போனில் வீடியோ பதிவு செய்கிறார். வீடியோவின் இறுதியில் பேசும் ரேஷ்மா, பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுக்கென ஒரு வாழ்க்கை இருப்பதையே மறந்துவிடுகின்றனர். பெண்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அதனை அவர்களது கணவர்கள் செய்ய விடுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.