AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : நாய் குட்டியை மரத்தின் மீது தூக்கிச் சென்ற குரங்கு.. வைரல் வீடியோ!

Monkey Took White Puppy On Tree | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில், குரங்கு ஒன்று நாய் குட்டியை மரக்கிளையின் மீது கொண்டு சென்று வைத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : நாய் குட்டியை மரத்தின் மீது தூக்கிச் சென்ற குரங்கு.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jun 2026 16:53 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குரங்கு ஒன்று நாய் குட்டியை கையில் வைத்துக்கொண்டு மரத்தின் மீது அமர்ந்துக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மரத்தின் மீது நாய் குட்டியை தூக்கிச் சென்ற குரங்கு

குரங்குகள் மரம் ஏறுவதில் கில்லாடிகள். மரத்தை விட்டு மரம் தாவுவது, கட்டடத்தை விட்டு கட்டடம் தாவுவது என குரங்குகள் செய்யும் சில சேட்டைகள் தொடர்பான வீடியோக்கள் சில அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குரங்கு ஒன்று நாய் குட்டியை மரத்தின் மீது வைத்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சீன பெருஞ்சுவரின் மீது கர்பா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், குரங்கு ஒன்று மரத்தின் மீது அமர்ந்துக்கொண்டு இருக்கிறது. குரங்கு மரத்தின் மீது அமர்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால், அந்த குரங்கின் கைகளில் நாய் குட்டி ஒன்று உள்ளது. அந்த குரங்கு தரையில் இருந்து வெள்ளை நிற நாய் குட்டி ஒன்றை மரத்தின் மீது எடுத்துச் சென்றுள்ளது. குரங்கின் கைகளின் இருந்து தவறும் பட்சத்தில் நாய் குட்டி கீழே விழுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஹரியானாவை கலக்கும் ஏசி ஆட்டோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், நாய் குட்டியின் நிலையை கண்டு பரிதாபமாக உள்ளதாக பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us