AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : சீன பெருஞ்சுவரின் மீது கர்பா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Indians Dancing Garba Dance On Great Wall of China | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியர்கள் சிலர் சீன பெருஞ்சுவரின் மீது கர்பா நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

Viral Video : சீன பெருஞ்சுவரின் மீது கர்பா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Jun 2026 19:33 PM IST

தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான, சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சியான சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு பதிவிடப்படும் சில வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், இந்தியர்கள் சிலர் சீன பெருஞ்சுவரில் நின்றுக்கொண்டு நடனமாடுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீன பெருஞ்சுவரில் நடனமாடிய இந்திய சுற்றுலா பயணிகள்

இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் சிலர், அங்கு இந்திய பாடல்களுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து ரீல்ஸாக தங்களது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய வீடியோக்களுக்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் அந்த நாட்டு மக்களின் உணர்வுகளை புன்படுத்தும் விதமாக நடக்க கூடாது என்றும், அந்த நாட்டு மக்களுக்கு தொந்தரவு தரும் இத்தகைய செயல்களை செய்யக்கூடாது என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, இவ்வாறு வெளிநாடுகளில் இந்தியர்கள் நடனமாடி பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பேசுபொருளாக மாறி வருகிறது. அந்த வகையில் தான் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : அசாமில் காணப்பட்ட வெள்ளை நிற மான்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சீன பெருஞ்சுவரின் மீது நின்றுக்கொண்டு இந்தியர்கள் சிலர் குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனத்தை ஆடுகின்றனர். பாரம்பரிய உடை அணிந்து, கைகளில் குச்சியை வைத்து அவர்கள் விழாக்களில் ஆடுவதை போல் ஆடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயிலில் விற்பனை செய்ய இருந்த சமோசாக்களின் மீது கால் வைத்திருந்த வியாபாரி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அவர்களின் செயலை கண்டித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us