Viral Video : அசாமில் காணப்பட்ட வெள்ளை நிற மான்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
Albino Hog Deer Spotted On Assam | மான்களில் பல வகை உள்ளன. இந்த நிலையில், அசாமில் வெள்ளை நிற மான் ஒன்று காட்டு பகுதியில் காணப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால், உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அசாமில் பதிவு செய்யப்பட்ட வெள்ளை நிற மானின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசாமில் காணப்பட்ட வெள்ளை நிற மான்
இந்தியாவில் மிக பரவலாக காணப்படும் வன விலங்காக மான் உள்ளது. இந்தியாவில் பல வகையான மான்கள் உள்ளன. சாம்பார் மான், கிளை மான் என பல வகை மான்கள் உள்ளன. இந்த நிலையில், இதுவரை எங்கேனும் காணப்படாத வகையில் வெள்ளை நிற மான் ஒன்று அசாமில் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : நியூயார்க் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Not every day does one witness something this rare 🦌
The sighting of an albino hog deer in @kaziranga_ stands as a symbol of the richness of our wildlife. It highlights our resolve to conserve and ensure that even the rarest species continue to thrive in the forests of Assam. pic.twitter.com/8jUDk1yScb
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 26, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் காட்டு பகுதியில், வெள்ளை நிற கிளை மான் ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அது மிகவும் அரிதான அல்பினோ ஹாக் வகை மான் (Albino Hog Deer) ஆகும். அந்த மான் சற்று நேரத்தில் அந்த பகுதியில் இருந்து ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : திடீர் ட்ரெண்டான கரப்பான்பூச்சி கட்சி.. சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவாளர்கள்.. என்ன நடந்தது?
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.