AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : Morning Running-ல் வெண்ணெய் எடுத்த தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Couple Churns Butter While Doing Morning Running | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தம்பதி இருவர் காலையில் ஓடிக்கொண்டே வெண்ணெய் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : Morning Running-ல் வெண்ணெய் எடுத்த தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 May 2026 20:01 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்களில் சில வியப்பை ஏற்படுத்தும் விதமாகவும், சில சிரிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், தம்பதி இருவர் ஓடிக்கொண்டே வெண்ணெயை பிரித்து எடுப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓடிக்கொண்டே வெண்ணெய் எடுத்த தம்பதி

உடற்பயிற்சி என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் நடைப்பயிற்சி, எடை தூக்குதல் உள்ளிட்டவை கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக பலரும்  ஜிம்முக்கு சென்று உடலை வலுவடைய செய்வர். சிலரோ வீட்டிலே தங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை செய்து தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வர். அந்த வகையில், காலை உடற்பயிற்சியின் போது ஓடிய தம்பதி இருவர் அதன் மூலம் வெண்ணெய் எடுத்தது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Tara & Sushila (@twofit.to.quit)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் வெண்ணெய் எடுக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த பெண்ணின் கணவர் அவருக்கு ஒரு ஆலோசனை வழங்குகிறார். அதன்படி, முதுகில் பை ஒன்றை மாட்டிக்கொண்டு அதில் அந்த வெண்ணெய் எடுக்க வைத்திருக்க பாத்திரத்தை வைக்கின்றனர். அவர்கள் ஓடி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் அந்த பாத்திரத்தை திறந்து பார்க்கின்றனர். அப்போது வெண்ணெய் தனியாக பிரிந்து காணப்படுகிறது. அதனை அவர்கள் தங்களது உணவுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இந்தோனேசியாவில் கண்ணை பறித்த வானவில் கோலம்.. வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், தம்பதியின் செயலை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us