Viral Video : தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கும் குடியிருப்பு வாசிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Residents Waiting In A Long Queue To Get Water In Noida Apartment | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் தண்ணீருக்காக காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்கள் சமூக சிக்கல்கள், குற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டும். அந்த வகையில், நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு வாசிகள் நீண்ட வரிசையில் தண்ணிருக்காக காத்திருப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த குடியிருப்பு வாசிகள்
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வழக்கமாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் தண்ணீர் டேங்கர் லாரியை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : நியூயார்க் வீதியை ஸ்தம்பிக்க வைத்த இந்திய ஜோடியின் திருமண வரவேற்பு!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் டேங்கர் முன்பாக ஏராளமான குடியிருப்பு வாசிகள் உள்ளனர். அவர்கள் தண்ணீருக்காக மிக நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கிறனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இதுபோன்ற குப்பையான கடற்கரையை பார்த்ததில்லை.. மகாபலிபுரம் குறித்து வீடியோ வெளியிட்ட வெளிநாட்டவர்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த சம்பவம் குறித்து கருந்து பகிர்ந்து வருகின்றனர். தண்ணீரை சேமிப்பதின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் என்ன என்பது குறித்தும் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.