தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஜூன் 24, 2026 இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, ஜூன் 24 : தமிழ்நாட்டில் ஜூன் 24, 2026 இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது இது தொடர்பாக வெளியான அறிவி்பில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
குறிப்பாக கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : வார இறுதி நாட்கள், மொஹரம் பண்டிகை.. 1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு
REGIONAL DAILY WEATHER REPORThttps://t.co/jW8fHWhd07 pic.twitter.com/YSwDkZp12Z
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 23, 2026
மேலும், வரும் ஜூன் 25, 2026 நாளை முதல் வரும் 28, 2026 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன் 25, 2026 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூன், 26, 2026 தேதி வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : குன்னூர் விநாயகர் கோவிலில் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் ரத்து.. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!
வரும் ஜூன் 27, 2026 சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 28, 2026 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூன் 24, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.