AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குரூப்-1 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்த டிஎன்பிஎஸ்சி – எப்போது விண்ணப்பிப்பது?

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 1 தேர்வுக்கு வருகிற ஜூன் 30, 2026 இருந்து ஜூலை 29 , 2026 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

குரூப்-1 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்த டிஎன்பிஎஸ்சி  – எப்போது விண்ணப்பிப்பது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Jun 2026 14:50 PM IST

சென்னை, ஜூன் 23 : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 1 தேர்வுக்கு வருகிற ஜூன் 30, 2026 இருந்து ஜூலை 29 , 2026 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது 26 காலி பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குரூப்-1 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்த டிஎன்பிஎஸ்சி

இது தொடர்பாக வெளியான அறிவிப்பி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 2026 ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (23.06.2026) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 30.062026 முதல் 29.07.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் 1 தேர்விற்கான முதல் நிலைத் தேர்வு 08.09.2028 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : ஆசிரியர் தேர்வு வாரிய மோசடி: 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு

 

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான கூடுதல் விவரங்கள், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான தகவல்களைத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-இல் தேர்வர்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 1 தேர்வுக்கு ஜூன் 30-ல் இருந்து ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 6ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் டிக்க : மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் முகப்பு பக்கத்தில் Exam Dashboard என இருப்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து, குரூப் 1 அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • அதில் Apply Online என இருப்பதை கிளிக் செய்தால், https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்திற்கு கொண்டு செல்லும்.
  • புதிதாக விண்ணப்பவர்கள் OTR பதிவு செய்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Follow Us