AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!

Sri Lanka Test Squad vs India 1st Test: காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் இலங்கையும் இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா இரண்டிலும், இலங்கை மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 2017-ல் நடைபெற்றது, அதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

IND vs SL: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை டெஸ்ட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Aug 2026 15:54 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் (IND vs SL) அறிவித்துள்ளது. தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக பதும் நிஸ்ஸங்கா அணியில் இடம்பெறவில்லை. முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்திய அணி (Indian Cricket Team) நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 11ம் தேதி காலிக்கு வந்தடைந்தது. அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 33 வயதான டிக்வெல்லா, 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 96 இன்னிங்ஸ்களில் 22 அரை சதங்கள் உட்பட 2,757 ரன்கள் எடுத்துள்ளார். அறிமுக வீரரான ஆஃப்-ஸ்பின்னர் கேசரா நுவந்தாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காலியின் பிட்ச் சூழல்களில் அவர் முக்கியப் பங்காற்றக்கூடும்.

ALSO READ: தீவிர பயிற்சியில் சுப்மன் கில் படை.. ஆடுகளத்தில் அசால்ட் செய்யும் பந்துவீச்சாளர்கள்!

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி

தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ் (துணை கேப்டன்), லஹிரு உதார, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, கேஷார ரத்னாயகே, லஹிரு ரத்னாயகே, அஸ்லாஹி ரத்னாயகே, விஷ்வா பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க.

காலியில் இலங்கை – இந்தியா டெஸ்ட் போட்டிகளின் சாதனை எப்படி உள்ளது?

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் இலங்கையும் இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா இரண்டிலும், இலங்கை மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 2017-ல் நடைபெற்றது, அதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இருப்பினும், இந்தியாவின் தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இலங்கையில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு இலங்கையில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவர்.

ALSO READ: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. ஜியோ ஹாட்ஸ்டாரில் காண முடியாதா?

இந்திய டெஸ்ட் அணி

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான்.

Follow Us