AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. விராட் கோலி 9 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்போவது யார்?

Virat Kohli 9 Years Record: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் அதிக சதங்கள் அடித்த சாதனை விராட் கோலியிடம் உள்ளது. கோலி 2017-18 தொடரில் 3 சதங்களை அடித்தார். இருப்பினும், 1997 தொடரில் 3 சதங்களை அடித்த அரவிந்த டி சில்வாவுடன் கோலி இந்தச் சாதனையைப் பகிர்ந்து கொள்கிறார்.

IND vs ENG: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. விராட் கோலி 9 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்போவது யார்?
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Aug 2026 15:35 PM IST

இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர் (IND vs SL Test Series) வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடருக்காக இலங்கை செல்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி கணிசமாக மாறியுள்ளது. இதில், கடந்த 2017ம் ஆண்டு தொடர் விராட் கோலிக்கு (Virat Kohli) ஒரு சிறப்பான தொடராக அமைந்தது. இந்தத் தொடரில், இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார்.

ALSO READ: காலி ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை என்ன..? யார் அதிக ரன்கள்? யார் அதிக விக்கெட்கள்?

விராட் கோலியின் 9 ஆண்டுகால சாதனை:

2017ம் ஆண்டு இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில், விராட் கோலி 5 இன்னிங்ஸ்களில் 610 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடர் சத மழையாகவே அமைந்தது. அதில் விராட் கோலி, 5 இன்னிங்ஸ்களில் 3 சதங்களையும் ஒரு அரைசதத்தையும் அடித்தார். அப்போது, ​​1997-ஆம் ஆண்டு தொடரில் 571 ரன்கள் எடுத்து சனத் ஜெயசூரியா வைத்திருந்த 20 ஆண்டு கால சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

வரவிருக்கும் இந்தியா-இலங்கை தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற உள்ளதால், வெறும் 4 இன்னிங்ஸ்களில் கோலியின் ‘விராட் கோலி’ சாதனையை எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் முறியடிப்பது எளிதாக இருக்காது. அனைவரின் பார்வையும் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் மீதுதான் இருக்கும். விராட் கோலியின் 9 வருடப் பழமையான சாதனையை யார் முறியடிக்கப் போகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தியா-இலங்கை தொடரில் அதிக ரன்கள்

  • 610 ரன்கள் – விராட் கோலி
  • 571 ரன்கள் – சனத் ஜெயசூரிய
  • 491 ரன்கள் – வீரேந்தர் சேவாக்
  • 467 ரன்கள் – குமார் சங்கக்காரா
  • 433 ரன்கள் – ராகுல் டிராவிட்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் அதிக சதங்கள் அடித்த சாதனை விராட் கோலியிடம் உள்ளது. கோலி 2017-18 தொடரில் 3 சதங்களை அடித்தார். இருப்பினும், 1997 தொடரில் 3 சதங்களை அடித்த அரவிந்த டி சில்வாவுடன் கோலி இந்தச் சாதனையைப் பகிர்ந்து கொள்கிறார்.

தற்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் யார் முன்னணியில் உள்ளார்?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்களில், தற்போது விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவர் இலங்கையின் தினேஷ் சண்டிமால் ஆவார். தினேஷ் சண்டிமால் 6 இன்னிங்ஸ்களில் 288 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில், ரவீந்திர ஜடேஜா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா இலங்கைக்கு எதிராக 3 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 202 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: 16 ஆண்டுகளுக்கு பிறகு! இது நிகழும்.. இந்தியா – இலங்கை டெஸ்ட் போட்டி ஏன் சிறப்பு வாய்ந்தது?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 23ம் தேதி கொழும்பிலும் நடைபெறும். மேலும், கடந்த 18 ஆண்டுகளில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us