IND vs SL: இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே.. வரலாறு படைக்கும் தருவாயில் இந்திய அணி!
Indian Cricket Team: வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி இலங்கையை 2-0 என்ற கோல் கணக்கில் முழுமையாக வீழ்த்தினால், அதன் மொத்த டெஸ்ட் வெற்றிகளின் எண்ணிக்கை 188-ஐ எட்டும். இந்த நிலையில், இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு பகுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – இலங்கை (IND vs SL) இடையிலான டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில், இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமானது, இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு பெரிய சாதனையை படைப்பதை இந்திய அணி (Indian Cricket Team) நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை அடைய, சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
ALSO READ: இலங்கைக்கு பிறகு இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணமா? ஒப்புதலுக்கு காத்திருக்கும் பிசிசிஐ!
இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பு:
இலங்கை சுற்றுப்பயணத்தில் வரலாறு படைக்க இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. அதன்படி, இந்த தொடரில் இந்திய அணியானது எவ்வளவு கஷ்டப்பட்டாவது 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். கடந்த 1932 முதல் இதுவரை நடைபெற்ற 599 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 186 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்றவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு இந்திய அணி பட்டியலில் முன்னேறக்கூடும்.




அதாவது, வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி இலங்கையை 2-0 என்ற கோல் கணக்கில் முழுமையாக வீழ்த்தினால், அதன் மொத்த டெஸ்ட் வெற்றிகளின் எண்ணிக்கை 188-ஐ எட்டும். இந்த நிலையில், இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறும். வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் 3 இடங்களில் எந்த அணிகள் உள்ளது..?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா 426 வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது. இங்கிலாந்து 405 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 191 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ALSO READ: இலங்கை மண்ணில் அனுபவமில்லாத இந்திய அணியா? 3 வீரர்களே மட்டுமே இதுவரை களம்!
மேலும், இந்தத் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில் இந்திய அணி இணையும். எனவே, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையக்கூடும்.