Team India: உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட வேண்டும்.. ஆதரவளித்த ரஹானே!
2027 ODI World Cup: இங்கிலாந்து தொடரின் போது லார்ட்ஸ் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித் ஓய்வு பெறுவார் என்ற கூற்றுகள் பரவத் தொடங்கின. ஆனால் அதே ஒருநாள் போட்டியில், ரோஹித் 138 ரன்கள் எடுத்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓய்வு குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் அஜிங்க்யா ரஹானே. அதில், ரோஹித் ஒரு சிறந்த வீரர் என்றும், அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வருகின்ற 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இதற்கிடையில், அவரது ஓய்வு குறித்த வதந்திகள் அதிகம் பேசப்பட்டது. இருப்பினும், பிசிசிஐ (BCCI) அந்த வதந்திகள் அனைத்தையும் நிராகரித்துள்ளது. 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்பதை இந்திய அணி நிர்வாகம் அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அவருக்கு இந்தத் தெளிவு கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ALSO READ: ரோஹித் சர்மாவை நீக்க விரும்பிய அகர்கர்.. பிசிசிஐ வைத்த ஆப்பு.. வெளியேறும் தலைமை தேர்வாளர் பதவி!
ரோஹித் சர்மா குறித்து ரஹானே:
ரோஹித் சர்மா குறித்து பேசிய அஜிங்க்யா ரஹானே, “ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்பதை இந்திய அணி நிர்வாகம் அவரிடம் சொல்வது மிகவும் முக்கியம். இத்தனை ஆண்டுகளில் ரோஹித் சர்மா ஆற்றிய பங்களிப்பைப் பாருங்கள். உலகக் கோப்பையில் அப்படிப்பட்ட ஒரு வீரரின் அனுபவம் தேவைப்படும். ரோஹித் ஷர்மாவின் திறமையை ஒவ்வொரு தொடராக மதிப்பிடக் கூடாது. அவர் உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த விவாதமும் இருக்கக்கூடாது. ரோஹித் மற்றும் விராட்டின் திறமைகள் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது” என்றார்.




இங்கிலாந்து தொடரின் போது லார்ட்ஸ் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித் ஓய்வு பெறுவார் என்ற கூற்றுகள் பரவத் தொடங்கின. ஆனால் அதே ஒருநாள் போட்டியில், ரோஹித் 138 ரன்கள் எடுத்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
ALSO READ: இந்திய கிரிக்கெட் குழப்பங்கள்.. சிக்கலில் அஜித் அகர்கர்.. கைவிரிக்கும் லட்சுமணன்
கோலிக்கும் ஆதரவாகவும் பேசிய ரஹானே:
அஜிங்க்யா ரஹானே சில நாட்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். மேலும், 2027 உலகக் கோப்பை குறித்து விவாதித்தபோது அவர் விராட் கோலிக்கு ஆதரவளித்தார் . அனுபவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஹானே தெளிவுபடுத்தினார். கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்திடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும்போது விளையாடுவதை அனுபவ வீரர்கள் விரும்புவார்கள். இதுகுறித்து பேசிய ரஹானே, “நீங்கள் ஒரு இளம் வீரராக இருந்தாலும் சரி, அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் சரி, கிரிக்கெட் என்பது ஃபார்மில் நீடிப்பதற்கான ஒரு விளையாட்டு. அவரது திறமை குறித்து எந்த விவாதமும் இருக்கக்கூடாது. விராட் கோலி 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால், அவர் நிச்சயமாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.