IND vs WI: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா..? தடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்..? 2வது ஒருநாள் போட்டி விவரங்கள்!
IND vs WI 2nd ODI Live Streaming: சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் நோக்கில் உள்ளது. இதற்கிடையில், ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய முனையும். திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா (Indian Cricket Team) 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான (IND vs WI) 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டி, இன்று அதாவது 2026 செப்டம்பர் 30ம் தேதி குவஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி பகல்/இரவு ஆட்டமாக இருக்கும். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் நோக்கில் உள்ளது. இதற்கிடையில், ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய முனையும். திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா (Indian Cricket Team) 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் நேரடி ஒளிபரப்பையும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கையும் எப்போது, எங்கே, எப்படிப் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்தியா – இலங்கை இடையிலான அரையிறுதி எப்போது..? எங்கு பார்க்கலாம்..?
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டியின் நேரலை ஒளிபரப்பு விவரங்கள்:
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று அதாவது 2026 செப்டம்பர் 30 ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள பர்சபாரா சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.




இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி எத்தனை மணிக்குத் தொடங்குகிறது?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியை டிவி மற்றும் மொபைலில் பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம். போட்டியின் நேரலை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் கிடைக்கும்.
ALSO READ: கோலியின் சாதனையை முறியடித்த கில் – 27 வயதில் 5 சாதனைகள்
இரு அணிகளின் முழு விவரம்:
இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், துருவ் ஜுரைல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், அகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் தீர்
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூஸ், ஜான் கேம்ப்பெல், கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், விட்டெல் லாஸ், கூடகேஷ் மோட்டி, கீமோ பால், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ்.