AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோலியின் சாதனையை முறியடித்த கில் – 27 வயதில் 5 சாதனைகள்

Shubman Gill Scripts 5 New Records : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில் ஐந்து குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தார். ஷிகர் தவான் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோரின் சாதனைகளை முறியடித்து, மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்

கோலியின் சாதனையை முறியடித்த கில் – 27 வயதில் 5 சாதனைகள்
சுப்மன் கில்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Sep 2026 18:03 PM IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில் ஐந்து குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தார். ஷிகர் தவான் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோரின் சாதனைகளை முறியடித்து, மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், ஒரு கேப்டனாகவும் அவர் ஒரு அரிய மைல்கல்லை எட்டினார். அவை குறித்த விரிவாக பார்க்கலாம்.

தவானின் சாதனையை முறியடித்த கில்

இந்திய அணிக்காக மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து, வெறும் 67 இன்னிங்ஸ்களில் அவர் இந்தச் சாதனையை எட்டினார். தவான் இந்த மைல்கல்லை 77 இன்னிங்ஸ்களில் எட்டிய நிலையில், விராட் கோஹ்லி தனது முதல் 10 சதங்களை அடிக்க 80 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். இந்தச் சாதனையின் மூலம், கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு அரிய மைல்கல்லைச் சேர்த்துள்ளார்.

இதையும் படிக்க : Team India: எங்களது ஓய்வு பிளான் இதுதான்.. கோலியுடான ரிட்டயர்மெண்ட் திட்டம் குறித்து ரோஹித் ஓபன்!

ஹஷிம் அம்லாவின் உலக சாதனையை சமன் செய்த கில்

முதல் 67 ஒருநாள் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்த வீரராக கில் உருவெடுத்துள்ளார். இதன் மூலம், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹஷிம் அம்லா வசம் இருந்த சாதனையை அவர் முறியடித்தார். 67 இன்னிங்ஸ்களில் கில் 3,489 ரன்கள் எடுத்த நிலையில், அம்லா 3,453 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், இந்த இன்னிங்ஸ்களில் 30 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்து, அம்லாவுடன் உலக சாதனையைப் பகிர்ந்து கொண்டார்.

கேப்டனாக விராட் கோலியின் சாதனையை முறியடித்த கில்

இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் 12 ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் அவர் விராட் கோலியை முந்தினார். கேப்டனாக இதுவரை கில் 714 ரன்கள் எடுத்துள்ள நிலையில், கோலி தனது முதல் 12 இன்னிங்ஸ்களில் 645 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ரோஹித் சர்மா இந்தப் பிரிவில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

3,000 ரன்களை அதிவேகமாக எட்டிய தொடக்க வீரர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக எட்டிய இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். வெறும் 61 இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன், ரோஹித் சர்மா (63 இன்னிங்ஸ்கள்) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (65 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் வசம் இந்தச் சாதனை இருந்தது. இப்போது அந்த ஜாம்பவான்கள் அனைவரையும் முந்தி கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க : IND vs WI: 55வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள்.. இமயம் தொட்ட விராட் கோலி!

சதங்கள் எண்ணிக்கையில் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில் வேகமாக முன்னேறி வருகிறார். அவர் தனது இதுவரை22 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். தற்போது, ​​கே.எல். ராகுலுடன் இணைந்து 11வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

Follow Us