AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸிலிருந்து வெளியேறிய குமரன் – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முன்பு எப்போதும் இல்லாத ஒன்றாக 4-வது வாரத்திலேயே பணப்பெட்டி டாஸ்க் நடைபெறுகின்றது. அதில் குமரன் அந்தப் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது போல வீடியோ வெளியாகி உள்ளது.

பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸிலிருந்து வெளியேறிய குமரன் – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Sep 2026 13:07 PM IST

தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. சின்னத்திரையிலும் வெள்ளித்திரையுலும் படங்களில் பார்த்து இருந்த பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதில் மக்களுக்கு தனி ஆர்வம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அதிக அளவில் கலந்துகொள்வது வழக்கம். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை 9 சீசன்களிலும் பணப் பெட்டி டாஸ்க் என்பது நிகழ்ச்சி முடிய சில நாட்களே உள்ள போது நடைபெறும். வெற்றித் தருவாயில் இருக்கும் போது அந்த போட்டியாளர்களிடையே பணத்தை வைத்து அதனை எடுத்துக்கொண்டு யார் வெளியேற உள்ளீர்கள் என்று கேட்பது வழக்கம்.

ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து பல ட்விஸ்ட்களும் சர்ப்ரைஸ்களும் ரசிகர்களுக்கும் போட்டியாளர்களும் அளித்து வருகின்றனர் நிகழ்ச்சி குழு. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது 23 நாட்கள் முடிவடைந்து 24-வது நாளை எட்டியுள்ளது.

பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸிலிருந்து வெளியேறிய குமரன்:

இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ வீடியோவில் ரோப் டாஸ்கில் உள்ள 6 பேருக்கு பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணப்பெட்டியில் ரூபாய் 5 லட்சம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எடுத்துக்கொண்டு யார் இந்த வீட்டை விட்டு வெளியேற உள்ளீர்கள் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பிய உடனே குமரன் கை தூக்குறார். அவர் கை தூக்கியதுமே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அவரை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். அவர்களுக்கு மட்டும் இல்லை வீட்டிற்கு வெளியே உள்ள ரசிகர்களுக்கும் அந்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது.

Also Read… Dharman: தர்மன் படத்தில் ராம் போதினேனி உறுதி.. நடிகை ராஷி கண்ணா இன்ஸ்டா பதிவு வைரல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பென்ஸ் படம் குறித்து என்னால் எதையும் இப்போது சொல்ல முடியாது – நிவின் பாலி

Follow Us