AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிஎம் விஜய்யிடம் இருந்து ஒரு போன் கால்..: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற அன்சி சோஜனின் ஆசை

Ancy Sojan Wins Silver : ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் நீளம் தாண்டுதலில் வெறும் இந்திய வீராங்கனை அன்சி சோஜன், வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்சி, தமிழக முதல்வர் விஜய் சாரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சிஎம் விஜய்யிடம் இருந்து ஒரு போன் கால்..: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற அன்சி சோஜனின் ஆசை
முதல்வர் விஜய் அன்சி சோஜன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Sep 2026 07:27 AM IST

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் நீளம் தாண்டுதலில் வெறும் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கத்தைத் தவறவிட்ட இந்திய வீராங்கனை அன்சி சோஜன், வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது ஆசிய விளையாட்டிலும் வெள்ளி வென்றுள்ள அவர், போட்டி முடிந்ததும் தெரிவித்த ஒரு விருப்பம் இப்போது தமிழக ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வர வேண்டும் என்பதே அந்த ஆசை என போட்டிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற அன்சி சோஜனின் ஆசை

இறுதிப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்சி சோஜன், தமிழக முதல்வர் விஜய் சாரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தால் நன்றாக இருக்கும். அவர் தரும் உத்வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அழைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : Asian Games 2026: மகளிர் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்.. தங்கத்தை தூக்கிய இந்திய மகளிர் அணி!

அன்சி சோஜன் நீண்ட நாட்களாகவே விஜய்யின் தீவிர ரசிகையாக அறியப்படுகிறார். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற இந்திய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் நீளம் தாண்டுதலில் வென்றபோது, விஜய்யின் பிரபலமான வெற்றி போஸை செய்து காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில் முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் கூடுதல் கவனம் பெறுகிறது.

முதல்வர் விஜய் குறித்து பேசிய அன்சி

 

கடந்த செப்டம்பர் 29, 2026 நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியின் பெரும்பான்மையான நேரம அன்சிதான் முன்னிலையில் இருந்தார். தனது 2வது முயற்சியில் 6.53 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்த அவருக்குத் தங்கம் உறுதி என்றே பலரும் நினைத்தனர். ஆனால், சீனாவின் ஹுவாங் யிங்யிங் தனது கடைசி முயற்சியில் 6.55 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். அப்போதும் ஹூவாங்கை முறியடிக்க அன்சிக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அன்சி தனது கடைசி முயற்சியில் அவரால் 6.49 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது. இதனால், வெறும் 2 செ.மீ. இடைவெளியில் தங்கம் கைநழுவியது.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது? இதுவரை மொத்த லிஸ்ட்

தங்கம் தவறினாலும், இந்த வெள்ளிப் பதக்கம் அன்சிக்குப் பெருமைமிகு சாதனையைக் கொடுத்துள்ளது. கடந்த 2023 ஹாங்சூ ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற அவர், இப்போது நகோயாவிலும் வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம், ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற 2வது இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருநாதார்.

மேலும் இந்த 2026வது ஆண்டு அன்சிக்கு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக அவர் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். .

Follow Us