ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் – வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்
CM Vijay Announces Reward : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 29 : ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வித்யா ராம்ராஜுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவித்த முதல்வர் விஜய்
செப்டம்பர் 29, 2026 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், வித்யா ராம்ராஜ், கிரண் பஹால், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 3 நிமிடம் 29.69 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது. பஹ்ரைன் அணி 3:30.21 நிமிடங்களில் ஓடி, வெறும் 0.52 வினாடி வித்தியாசத்தில் தங்கத்தைத் தவறவிட்டு வெள்ளியுை வென்றது. சீன அணி 3:31.02 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து வெண்கலம் வென்றது. இந்தப் போட்டிகளில் இந்தியா பெற்ற 6வது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : ரூ.46 கோடி காசோலை மோசடி – நடிகை ராதாவிடம் 3 மணி நேரம் விசாரணை – அம்பிகாவுக்கும் சம்மன் அனுப்ப திட்டம்
பதக்கங்களை குவித்த வித்யா
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வித்யா ராம்ராஜுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளன. முதலில், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணியில் அவர் பங்கேற்றார். அடுத்து, மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் ஓடி வெண்கலம் வென்றதோடு, 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் முறியடித்தார. தற்போது தொடர் ஓட்டத் தொடரில் அவரது அணி தங்கம் வென்றுள்ளது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. .
முதல்வர் விஜய் வாழ்த்து
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது… pic.twitter.com/IEIQWQcYQk
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 29, 2026
இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் பெண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் பெறும் மூன்றாவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிக்க : சேலம் – சென்னை இடையே இனி தினமும் 2 விமானங்கள் – எப்போ தெரியுமா?
தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.